திங்கள், 5 ஏப்ரல், 2010



சனத் ஜெயசூரியாவை கண்டித்து தமிழ் நாட்டில் ஆர்ப்பாட்டம்

05 April, 2010 by admin

ஐ.பி.எல் கிரிகெட் போட்டியின் மும்பை இந்தியன் அணி சார்பில் இலங்கையை சேர்ந்த சனத் ஜெயசூரியா விளையாடுகிறார். இவர் லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவித்த ராஜபக்சே கட்சியின் வேட்பாளராக இலங்கை பாரளுமன்றத்துக்கு இம்மாதம் நடைபெறும் தேர்தலில் போட்டியிடுகிறார் அதனால் இவர் சென்னை போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடினால் தமிழ் மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவதாக அமையும் என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி கடந்த மாதம் தனது பேட்டியில் தெளிவுபடுத்திருந்தார்.

இதையும் மீறி சென்னையில் விளையாட வந்தால் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் கூறினார். இதை முன்னிட்டு ராஜபக்சேவின் தேர்தல் கூட்டாளியும், ஐ.பி.எல் கிரிகெட் போட்டியின் மும்பை இந்தியன் அணி சார்பில் சென்னையில் விளையாடும் இலங்கையை சேர்ந்த கிரிகெட் வீரர் சனத் ஜெயசூரியாவை கண்டித்து சென்னை மெமொரியல் அரங்கின் அருகே புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜெயசூரியாவிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசும்,மும்பை இந்தியன் அணி நிர்வாகமும் தலையிட்டு நாளை நடைபெறும் போட்டியில் அவரை விளையாட அனுமதிக்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் வட சென்னை அமைப்பு செயலாளர் ராஜாஇ துறைமுகம் கண்ணன், பாபு இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், பத்மநாபன், பச்சையாப்பன் உலக தமிழர் மாணவர் பேரியக்கம் சார்பில் ஜெகன் உட்பட மாணவர்கள் பங்கேற்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாவட்டம் சார்பில் விமான நிலையத்தில் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கலந்த கொண்ட சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர்கள் ராஜேந்திர பிரசாத்,பத்மநாபன், விமல்குமார் உட்பட 20 பேர் விமான நிலைய காவல்துறையினாரால் கைது செய்யப்பட்டனர். ஜெயசூரியா மும்பையில் இருந்து நேரடியாக மற்ற வீரர்களுடன் வராமல் இலங்கை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்து இரகசியமாக தங்கும் விடுதிக்கு அழைத்து செல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=2858

http://meenakam.com/?p=12123

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1004/05/1100405062_1.htm