ஞாயிறு, 26 ஏப்ரல், 2009

தமிழக முதல்வர் இறுதி எச்சரிக்கை விடுத்து உண்ணாவிரதம்


நண்பர்களே, விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் என்று அறிவித்த பின்பும், கொலைகார சிங்கள அரசு போரைத் தொடருகின்றது. உலக நாடுகள் அனைத்தும் கண்டித்த பின்பும் தான் பெரிய ரவுடி என்று பறை சாற்றும் வகையில் போரைத் தொடருகின்றது இலங்கை அரசு. தமிழக முதல்வர் இறுதி எச்சரிக்கை விடுத்து உண்ணாவிரதம் இருக்கின்றார். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். பத்திரிக்கைகளும், அரசியல் இயக்கங்களும் இலங்கைப் பிரச்சனையை கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் ஜெயலலிதாவின் பேச்சும், கருணாநிதியின் போராட்டமும் தமிழீழ பிரச்சனையின் வீரியத்தை உலகரியச் செய்யும் என நம்பலாம். ஆனால் தமிழின விடுதலைக்காக பூராடியவர்க்ளை எல்லாம் சிறைப்படுத்தி விட்டு தான் மட்டும் போராடுவதால் எதைச் சாதிக்க பூக்கிறார் எனத் தெரியவில்லை. ஆனாலும் இறுதிக் கட்டத்தில் நாடகம் எதற்காக நடந்தாலும் மனித உயிர்கள் காப்பற்றப் பட இணைந்த போராட்டம் அவசியம். எததனையோ கோரிக்கை வைத்தும் அசையாத மன்மோகன் தற்போது உடனே ரஜபக்ஸே உடன் பேசுகிறேன் என்கிறார். கலைஞர் உண்ணாவிரதம் தொடர வீண்டும். தமிழகம் முழுவதும் தி.மு.க. காரன் மட்டுமாவது இறுதிப் போரை நிறுத்தச் சொல்லி வீதிக்கு வருவான். தேர்தலை விட மக்களின் உயிர் மேலானது என ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகள் உணரட்டும். விமர்சனங்களை குறைத்து யார் பேச்சு அல்லது யார் போராட்டம் பெரியது என்பதை பிறகு பார்ப்போம். லண்டனிலும், பாரீசிலும், மலேஸியாவிலும் கூடிய கூட்டம் போன்று உணர்வுப் பூர்வமான தானே எழுச்சி பெற்ற தமிழர் போராட்டம் இதுவரை இல்லை. (ஏதோ கட்சிகள் சார்ந்துதான் நடந்துள்ளது. முத்துகுமார் மரண ஊர்வலம் தவிர்த்து..) இனியாவது பிரச்சனையின் வீரியம் சாமானிய மக்களுக்கும் போய்ச் சேரட்டும். மக்களின் விடுதலைப் போராட்டம் துவங்கட்டும். இப்பவாது காங்கிரஸ்காரன் முதல்வர் உயிரையாவது காப்பாற்றுவானா பார்ப்போம்!. இல்லை கலைஞர் அன்னை சோனியாவுக்காக தமிழர்களை மறந்து உண்ணாவிரதத்தை கைவிடுவாரா பார்ப்போம்.



காங்.., தலைவர் சோனியா தொலைபேசியில் முதல்வருடன் உரையாடல்
ஏப்ரல் 27,2009,11:04 IST



‌புதுடில்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா உண்ணாவிரதம் இருக்கும் முதல்வர் கருணாநிதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை தமிழர் பிரச்னை குறித்து கவலை தெரிவித்தார். மேலும் கருணாநிதி அவரது உடல்நிலை கருதி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


பொள்ளாச்சியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது
ஏப்ரல் 27,2009,10:43 IST



பொள்ளாச்சி : முதல்வர் கருணாநிதி உண்ணாவிரத்துக்கு ஆதரவு தெரிவித்து பொள்ளாச்சியில் தி.மு.க., வினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். தி.மு.க.,. வினர் சாலை மறியலால் அங்கு போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. இன்று மாலை பொள்ளாச்சியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரசாரம் செய்யவிருக்கிறார். முதல்வரின் உண்ணாவிரத போராட்டத்தால் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை காரணமாக ஜெ பிரசாரம் குறித்து அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது . பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் ஜெயராமன், வேலுமணி மற்றும் தாமோதன் தலைமையிலான அ.தி.மு.க., வினர் திடீர் சாலை மறியலில் குதித்துள்ளனர். ஜெ பிரசாரம் நடக்கவிருக்கும் நிலையில் போக்குவரத்தை நிறுத்துவது சதி வேலை என கூறியுள்ளனர். அங்கு தி.மு.க., வினர்- அ.தி.மு.க.,. வினருக்கு இடையே நேரடி மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது .


பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் : முதல்வர் கோரிக்கை
ஏப்ரல் 27,2009,10:39 IST



சென்னை : உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முதல்வர் கருணாநிதி, தொண்டர்களுக்கு பொதுமக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காகத் தான், உண்ணாவிரதம் இருக்கிறேன். எனவே இந்த அறப் போராட்டத்தில் அமைதியாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு தொண்டர்கள் எந்த ஒரு இடையூறும் செய்ய கூடாது. கடைகள் மூடுவது, பஸ் போக்குவரத்தை நிறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் . மாறாக அமைதியாக போராட்டத்தில் ஈடுபடுங்கள். மாணவர்களும், இளைஞர்களும் பெருமளவில் இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை பிரச்னையை மனிதநேய அடிப்டையில் அணுகுகிறோம் : வீரப்ப மொய்லி
ஏப்ரல் 27,2009,10:31 IST



புதுடில்லி : காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி , இலங்கை பிரச்னையை மனித நேற அடிப்டையில் காங்கிரஸ் அணுகி வருகிறது. அங்கு தவிக்கும் அப்பாவி தமிழர்கள் மீட்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கவனமாக இருக்கிறது . இந்த தருணத்தில் இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும். அதற்காக காங்கிரஸ் அனைத்து நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி வருகிறது. முதல்வர் கருணாநிதியின் உடல் நலனில் காங்., அக்றை கொண்டுள்ளது. எனவே பிரதமர் மன்மோகன்சிங், சோனியா ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கி உண்ணாவிரதத்தை கைவி‌ட வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார்.


புதுக்கோட்டையில் பஸ் மறியல் பதற்றம்
ஏப்ரல் 27,2009,10:22 IST



புதுக்கோட்டை : புதுக்கோட்டையில் முதல்வர் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அமைச்சர் ரகுபதி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது . புதுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் தி.மு.க., வினர் மறியலால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுறுகிறது .


ஈரோட்டில் கடைகள் அடைப்பு
ஏப்ரல் 27,2009,10:13 IST



ஈரோடு : முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் பி.கே.பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கடைகளை மூடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் ஈரோட்டில் கடைகள் மூடப்பட்டுள்ளன.


மன்மோகன்சிங் , சோனியா, பிரணாப்புக்கு தமிழக எம்.பி., க்கள் தந்தி
ஏப்ரல் 27,2009,10:09 IST



சென்னை : இலங்கை பிரச்னையில் உண்ணாவிரதம் இருந்துவரும் முதல்வர் கருணாநிதியின் உட,ல் நிலை கருதி இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு தமிழக எம்.பி.,க்கள் பிரதமர் மன்மோகன்சிங், காங்., தலைவர் சோனியா மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு அவசர தந்தி அனுப்பியுள்ளனர்.

உடுமலையில் தி.மு.க., வினர் சாலை மறியல்
ஏப்ரல் 27,2009,10:04 IST



உடுமலைப்பேட்டை : உடுமலைப்பேட்டையில் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தின் எதிரொலியாக சாலை மறியல் நடைபெற்றது . முன்னாள் எம்.எல்.ஏ., தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது . போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உடுமலையில் பஸ்கள் ஓடவில்லை . பதற்றமான சூழல் நிலவுகிறது.


நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி முதல்வரை சந்தித்தனர்
ஏப்ரல் 27,2009,10:00 IST



சென்னை : நடிகர்கள் சத்யராஜ், ராதாரவி , நடிகை வியக்குமாரி ஆகியோர் உண்ணாவிரதம் இருக்கும் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர். அவரிடம் உடல் நலன் கருதி உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுமாறு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.


சேலத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உண்ணாவிரதம்
ஏப்ரல் 27,2009,09:58 IST



சேலம் : சேலத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு உண்ணாவிதம் இருந்து வருகிறார். சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தலைமையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் தங்கபாலு கலந்து கொண்டுள்ளார். அவர் முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை : பிரதமர் மன்மோகன்சிங் , காங்., தலைவர் சோனியா ஆகியோரின் கோரிக்கையை ஏற்று தாங்கள் தங்கள் உடல் நலன் கருதி உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வேண்டும் . அவர்கள் சார்பாக நாங்கள் உண்ணாவிரதத்தை நடத்துவோம் , எந்த தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம் . சிங்கள அரசுக்கு போரை நிறுத்த தொடர்ந்து காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


போரை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன : வாசன்
ஏப்ரல் 27,2009,09:49 IST



சென்னை : இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் முதல்வர் கருணாநிதியை ‌காங்., மூத்த தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் ஐ.மு., கூட்டணி இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் ‌என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது .பிரதமரும், காங்., தலைவர் சோனியாவும் அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். எனவே முதல்வர் அவரது உடல் நிலை கருதி உண்ணாவிரதத்தை கைவிட வேண்டம் . இவ்வாறு அவர்
முதல்வர் உண்ணாவிரதம் இருப்பதை பார்த்து சும்மா இருக்க முடியாது : அழகிரி
ஏப்ரல் 27,2009,08:59 IST



மதுரை : முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அதனால் தான் நாங்களும் உண்ணாவிரதம் இருக்கிறோம் . இந்த உண்ணாவிரதம் உணர்வுப் பூர்வமானது . இதில் கட்சி ஆர்வமுள்ள அனைவரும், கட்சிக்கு அப்பாற்பட்டவரும் கூட கலந்து கொள்ள வேண்டும் . இலங்கையில் தமிழ் இன படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும் , தமிழர்களுக்கு எதிரான போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக கருணாநிதி வழியில் உண்ணாவிரதம் இருக்கி‌றேன் . இவ்வாறு தி.மு.க., தென்மண்டல அமைப்பு செயலாளர் அழகிரி தெரிவித்துள்ளார். மதுரை லேமாசி வீதி சந்திப்பில் அழகிரி தலைமையில் தி.மு.க.,. வினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


பிரதமர் கோரிக்கை கருணாநிதி நிராகரிப்பு
ஏப்ரல் 27,2009,08:52 IST



புதுடில்லி : இலங்கையில் ‌போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கும் முதல்வர் கருணாநிதியுடன் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். பிரதமரின் ‌கோரிக்கையை நிராகரித்த முதல்வர் , எல்லாரும் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். இதற்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை என்று கூறினார். இதை தொடர்ந்து பிரதமரின் விஷேச தூதர் சென்னை வரவிருக்கிறார்.

திங்கள், 13 ஏப்ரல், 2009

தூத்துக்குடியில் இலங்கை பிரச்சினை குறித்த டிவிடிக்கள் காவற்துறை தடையை மீறி விநியோகம்:

தூத்துக்குடியில் காவற்துறை தடையை மீறி பெரியார் தி.க.வினர் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு ஆதரவான டிவிடிகளை விநியோகித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் பெரியார் திராவிடர் கழகம் தீவிரம் காட்டி வருகிறது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள், இயக்குநர் சீமானின் பேச்சுக்கள், கொழுவை நல்லூர் முத்துக்குமரனின் இறுதி நிமிடங்கள் மற்றும் தமிழர்களுக்கு ஆதரவான கவிதைகள் கொண்ட டிவி டியை தயாரித்து, அதனை வெளியிடப் போவதாக அறிவித்தது.
இதனை வெளியிட காவல்துறை அனுமதிக்கவில்லை. இருப்பினும் அதனை மக்கள் மத்தியில் எப்படியாவது சேர்த்துவிடும் முயற்சியில் பெரியார் கழக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்த பெரியார் திராவிடர் கழக நிர்வாகிகள் அந்த டிவிடியின் ஒரு இலட்சத்திற்கும் மேற் பட்ட பிரதிகளை ஏற்கனவே தமிழகம் முழு வதும் வியோகித்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து தமிழகம் முழுவதும் உளவுத்துறையினர் மற்றும் காவற்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் அந்த குறிப்பிட்ட டிவிடிகள் இரகசியமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் கூடும் பகுதிகள், மார்க்கெட், டீக்கடைகள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் வந்து இந்த குறிப்பிட்ட டிவிடிகளை யாரும் அறியாதவகையில் பைக்குகள் மீதும், கார்கள் மீதும், உடமைகள் மீதும் போட்டு விட்டு செல்கின்றனர்.
முத்திரைகளோ அல்லது முகவரிகளோ இல்லாத இந்த டிவிடிகளின் கவரில் ஒரு கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த டிவிடி உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடியது. பலரின் வாழ்வில் ஒளியற்றக்கூடியது. நமது எதிரிகளை அடையாளம் காட்டுவது. ஆகவே கட்டாயம் பாருங்கள். தெரிந்தவர்களுக்கு பிரதி எடுத்துக் கொடுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மொத்தம் 3 வீடியோ பைல்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றில் இயக்குநர் சீமான் பேச்சின் முழு பதிவும், மற்றொன்றில் இலங்கை தமிழர்கள் சிலர் பேட்டியும் இடம்பெற்றுள்ளன.
தற்போது தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த டிவிடிகள் காவற்துறை தடையை மீறி விநியோகிக்கபட்டு வருவதால் தூத்துக்குடி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போர் நிறுத்தத்தை அறிவித்த அரசு இன்றும்(திங்கள்) தமிழர்களை கொலை செய்தது

37 தமிழர்கள் படுகொலை, 112 பேர் படுகாயம்
[ திங்கட்கிழமை, 13 ஏப்ரல் 2009, 06:41.31 AM GMT +05:30 ]

புதுவருடத்தை முன்னிட்டு இன்று திங்கட்கிழமையும் நாளையும் தாக்குல் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்ற போதிலும் நேற்று நள்ளிரவு முதல் 'மக்கள் பாதுபாப்பு வலய' பகுதிகள் மீது கடுமையான எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை 7:00 மணி வரையில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 37 அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 112 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்தும் எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருவதாக தெரியவருகின்றது.தாக்குதல் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துமாறு சிறிலங்கா அரச தலைவர் படையினருக்கு நேரடியாகவே உத்தரவிட்டிருப்பதாக சிறிலங்கா அரச தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்ற போதிலும், நேற்று நள்ளிரவு 12:00 மணி முதல் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களை மக்கள் அதிகமாகவுள்ள பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் புதுக்குடியிருப்பில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதி மீது தொடர்ச்சியான தாக்குதல்களை தொடங்கியுள்ள சிறிலங்கா படையினர், பொதுமக்கள் அடைக்கலம் புகுந்திருக்கும் பகுதிகளை நோக்கியும் வழமைபோலவே எறிகணைத் தாக்குதல்களைப் பெருமளவுக்கு மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி நள்ளிரவு முதல் எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் பீரங்கி மற்றும் தொலைதூர துப்பாக்கி தாக்குதல்களை சிறிலங்கா படையினர் நடத்தி வருகின்றனர்.இன்று காலை 7.00 மணிவரையில் நடைபெற்ற தாக்குதல்களில் 37 தமிழர்கள் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில் 112 பேர் படுகாயமடைந்த நிலையில் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். தாக்குதல்கள் தொடர்வதால் இந்தத் தொகை மேலும் அதிகரிக்கப்படலாம். தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழை காரணமாக பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டுள்ள பதுங்குகுழிகள் அனைத்தும் வெள்ளக்காடாகக் காணப்படும் நிலையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள இந்த அகோர தாக்குதல்களில் இருந்து உயிர் தப்பிக்கொள்ள முடியாது மக்கள் சிதறியோடுவதைத்தான் இன்று அதிகாலையிலேயே காண முடிந்தது. இதேவேளையில் புதுக்குடியிருப்புப் பகுதியில் உள்ள பச்சைப்புல்மோட்டைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதியை நோக்கி படையினர் இன்று அதிகாலை முதல் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, விடுதலைப் புலிளும் எதிர்த்தாக்குதல்களை நடத்த மோதல்கள் தீவிரமடைந்திருக்கின்றன. இன்று அதிகாலை முதல் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், களநிலைமைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் சிறிலங்கா படைத்தரப்பினர் தாக்குதல்களை தொடங்கியிருப்பது தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை என்பதைத்தான் காட்டுவதாக உள்ளது.