வெள்ளி, 18 டிசம்பர், 2009

கேள்​விக்​கு​றி​யா​கும் மீன​வ​ரின் வாழ்​வு​ரிமை

எம். சேது​ராம​லிங்​கம்                                                                                   நன்றி - தினமணி 

க​ட​லோ​டும், கடற்​க​ரை​யோ​டும் பின்​னிப் பிணைந்​தது தான் மீனவ சமூ​கத்​தின் வாழ்க்கை. வர​லாறு முழு​வ​தும் பர​த​வ​ரின் சிறப்​பு​மிக்க பண்​பா​டும் வீர​மிக்க போராட்​டங்​க​ளும் மறைக்​கப்​பட்டே வந்​துள்​ளன. ÷ நாட்​டின் எல்​லைப் பகு​தி​க​ளான கடற்​க​ரை​க​ளில் வாழ்ந்து கொண்டு கடல்​புற வழி​யாக வெளி​நாட்டி​லி​ருந்து வரும் ஆக்​கி​ர​மிப்​பா​ளர்​களை விரட்​டி​ய​டித்து தம் இன்​னு​யி​ரைத் தியா​கம் செய்து, நாட்​டைக் காப்​பாற்​றிய எல்​லை​யோ​ரக் காவ​லர்​க​ளாக வாழ்ந்​த​வர்​கள் தான் மீனவ சமூ​கத்​தி​னர். நாள்​தோ​றும் மீன​வ​ரின் தொழில் வாழ்க்கை என்​பது குளி​ரூட்​டப்​பட்ட அறை ஒன்​றுக்​குள் காலை 9 மணிக்​குத் தொடங்கி மாலை 5 மணி வரை அமர்ந்து பணி உத்​த​ர​வா​தத்​து​டன் ஓர் ஊழி​யர், அதி​காரி செய்​யும் வேலை​யைப் போன்​ற​தல்ல. கட​லுக்​குப் போனால் உயி​ருக்​கும், திரும்பி வரு​வ​தற்​கும் எந்​த​வித உத்​த​ர​வா​த​மும் இல்லை. உள்​ளூ​ரில் யார் காணா​மல் போனா​லும் தொலைக்​காட்சி உள்​ளிட்ட பல ஊட​கச் சாத​னங்​க​ளில் விளம்​ப​ரப்​ப​டுத்​தப்​பட்டு தனிப் போலீஸ்​படை அமைத்து தேடு​த​லும் முடுக்​கி​வி​டப்​ப​டு​கி​றது. ஆனால் மீன​வர்​கள் கட​லில் காணா​மல் போனால் வழக்​குக் கூட பதி​வா​காது. இப்​படி உயி​ரைப் பண​யம் வைத்து மீன​வர் பிடிக்​கும் மீன் ஏற்​று​ம​தி​யால் நாட்​டுக்​குக் கிடைக்​கும் அந்​நி​யச் செலா​வணி பல ஆயி​ரம் கோடி​க​ளைத் தாண்​டும். ÷இந்​தியா உல​கின் மீன் உற்​பத்​தி​யில் மூன்​றாம் இடம் வகிக்​கி​றது. நன்​னீர் மீன் உற்​பத்​தி​யில் இரண்​டாம் இடம் வகிக்​கி​றது. இத்​த​னைக்​கும் மீன​வ​ரின் மக்​கள்​தொகை நாட்​டின் மக்​கள் தொகை​யோடு ஒப்​பி​டும் போது மிக​வும் குறை​வா​னதே. உணவு மற்​றும் விவ​சாய அமைப்​பின் கணக்​கின்​படி மொத்த மீன​வர் 8.70 மில்​லி​யன். இதில் முழு நேர​மாக மீன்​பிடி தொழி​லில் ஈடு​ப​டு​ப​வர்​கள் 0.93 மில்​லி​யன், பகுதி நேர மீன​வர்​கள் 1.07 மில்​லி​யன், மீன் சார்ந்த மற்ற நட​வ​டிக்​கை​க​ளில் ஈடு​ப​டு​ப​வர்​கள் 3.96 மில்​லி​யன் ஆகும். ÷க​டுகு சிறுத்​தா​லும் காரம் போகாது. இவ்​வ​ளவு மக்​கள் தொகை​யில் சிறு​பான்​மை​யி​ன​ராக இருந்​தா​லும் தினந்​தோ​றும் உயி​ரைப் பண​யம் வைத்​துப் பிடிக்​கும் மீன்​பி​டிப்​பால் நாட்​டின் 20 சத​வி​கி​தம் அந்​நி​யச் செலா​வ​ணியை ஈட்​டித் தரு​கின்​ற​னர். அதே உணவு மற்​றும் விவ​சாய அமைப்​பின் கணக்​குப்​ப​டியே கடந்த 2003-2004-ம் ஆண்​டின் மொத்த மீன் உற்​பத்தி 63-99 டன்​கள். மீன் குஞ்சு உற்​பத்தி 19,173 மில்​லி​யன். அதே காலத்​தில் ஏற்​று​மதி 5.21 லட்​சம் டன்​கள். அதா​வது, 6793.05 கோடி ரூபாய். இது கடந்த 2007-2008-ல் 9000 கோடி ரூபா​யாக அதி​க​ரித்​துள்​ளது. எந்​த​வித எதிர்​பார்ப்​பும் இன்றி பிர​தி​ப​லன் பாராது நாட்​டுக்கு உழைக்​கும் மீன​வர்​க​ளுக்கு அரசு என்ன தான் செய்​துள்​ளது? ÷மீ​ன​வ​ரைக் கடற்​க​ரையி​லி​ருந்​தும், மீன்​பிடி தொழி​லி​லும் இருந்​தும் அகற்​றிட அரசு மறை​மு​க​மா​க​வும் நேர​டி​யா​க​வும் பல சட்​டங்​கள், கொள்​கை​கள் மற்​றும் திட்​டங்​களை உரு​வாக்கி வரு​கி​றது. இது சற்று அதிர்ச்​சி​யாக இருக்​க​லாம். ஆனால் இது​தான் உண்மை. கடந்த சில பத்​தாண்டு கால வர​லாற்​றில் நடந்த நிகழ்​வு​கள் இந்த உண்​மையை நமக்கு உணர வைக்​கின்​றன. ஏன் இப்​படி நடக்​கி​றது? ஒப்​பீட்​ட​ள​வில் உல​கின் பல நாடு​க​ளின் கடற்​க​ரை​கள் மாச​டைந்​து​விட்​டன. கடல் வளங்​க​ளும், அள​வுக்கு அதி​கப்​ப​டி​யான மீன்​பி​டிப்​பால் சுரண்​டப்​பட்​டு​விட்​டன. உதா​ர​ண​மாக ஜப்​பான் மற்​றும் சில கிழக்​கா​சிய நாடு​க​ளி​லும், அமெ​ரிக்​கா​வி​லும் கடல் மீன்​வ​ளம் குறைந்​து​விட்​ட​ப​டி​யால் செயற்​கை​யான முறை​யில் நிலங்​க​ளி​லும், கடற்​க​ரை​க​ளி​லும் பாத்தி கட்​டி​யும், பண்ணை அமைத்​தும் மீன் வளர்க்க முயற்​சி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. அதே​ச​ம​யத்​தில் இதற்கு மாறாக இந்​தி​யக் கடற்​க​ரை​யும், கடல்​வ​ளங்​க​ளும் பெரு​ம​ள​வில் வளங்​குன்​றா​மல் அழ​கு​டன் திகழ்​கின்​றன. 7,517 கி.மீ. நீள​முள்ள இந்​தி​யக் கடற்​க​ரை​யை​யும் ஆண்​டுக்கு பல ஆயி​ரம் கோடி வரு​வாய் தரும் கடல் வளத்​தை​யும் குறி வைத்து ஏரா​ள​மான தனி​யார் சுற்​றுலா நிறு​வ​னங்​க​ளும், அந்​நிய மீன்​பிடி நிறு​வ​னங்​க​ளும் வரத் துவங்​கி​விட்​டன. நாட்​டின் உல​க​ம​ய​மாக்​கல் கொள்​கை​கள் அமல்​ப​டுத்​தத் துவங்​கி​யதி​லி​ருந்து டாலர் குவி​யும் இட​மா​கக் கடற்​க​ரை​யைப் பார்க்​கத் தொடங்​கி​விட்​ட​னர். இக்​கா​லந்​தொட்டே கடற்​க​ரையை ஆக்​கி​ர​மிக்​கும் திட்​டங்​கள் அணி வகுக்​கத் தொடங்​கி​விட்​டன என்​பது கவ​னிக்​கத்​தக்​கது. ÷க​டற்​க​ரை​யில் ஓய்வு விடு​தி​கள், ரிசார்ட்​டு​கள், நீர் விளை​யாட்​டு​கள், மிதவை ஹோட்​டல்​கள் கட்டி வெளி​நாட்டு சுற்​று​லாப் பய​ணி​க​ளுக்கு வாட​கைக்கு விட்​டால் கிடைக்​கும் அந்​நி​யச் செலா​வணி அதி​க​மா​கும். அதே​போன்று வெளி​நாட்டு நிறு​வ​னங்​கள், தொழிற்​சா​லை​கள், அனல் மின் நிலை​யங்​கள், அணு​மின் நிலை​யங்​கள், கணிப்​பொ​றி​த​க​வல் தொழில் நுட்​பப் பூங்​காக்​கள் இவற்றை உள்​ள​டக்​கிய சிறப்​புப் பொரு​ளா​தார மண்​ட​லங்​கள் எனக் கடற்​க​ரை​யில் அமைந்து கொண்​டி​ருக்​கும் மற்​றும் அமைய இருக்​கும் வளர்ச்​சித் திட்​டங்​க​ளின் பட்​டி​யல் முடி​வில்​லா​மல் நீள்​கி​றது. இவர்​க​ளின் நிர்​பந்​தத்​தால் கடற்​கரை மண்​டல ஒழுங்​கு​முறை அறி​விப்​பாணை 1991  பல​முறை திருத்​தப்​பட்டு நீர்த்​துப் போகச் செய்​யப்​பட்​டது. இத​னைப் பலப்​ப​டுத்​து​வ​தற்கு விவ​சாய விஞ்​ஞானி எம்.எஸ். சுவா​மி​நா​த​னின் தலை​மை​யில் அமைக்​கப்​பட்ட கமிட்​டி​யின் பரிந்​து​ரை​க​ளின் அடிப்​ப​டை​யில் கடற்​கரை மண்​டல மேலாண்மை அறி​விப்​பாணை இயற்​றப்​பட்​டது. இந்த அறி​விப்​பா​ணை​யா​னது கடற்​க​ரையி​லி​ருந்து 1 கி.மீ.(1000 மீட்​டர்) தொலை​வுக்கு அப்​பால் மீன​வர்​கள் செல்ல வேண்​டும் என்​றும் கட​லுக்​குள் 12 கடல் மைல்​க​ளுக்கு வளர்ச்​சித் திட்​டங்​கள் அமைக்​கப்​பட வேண்​டும் (மீன் பிடிக்க அனு​ம​தி​யில்லை என்​பது மறை​மு​க​மா​னது) என்​றும் பரிந்​து​ரைத்​தது. இது மீன​வர்​க​ளுக்கு எதி​ராக இருந்​தது. கடல்​வ​ளத்​தை​யும் கடற்​க​ரை​யை​யும் பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளுக்​குத் தாரை​வார்ப்​ப​தாக இருந்​தது அனை​வ​ரும் அறிந்​ததே. இதற்கு மீன​வர்​கள் கடும் எதிர்ப்​புத் தெரி​வித்​த​தால் திரும்​பப் பெறப்​பட்​டது. அதற்​குப் பதி​லாக இப்​போது கடல் மீன்​பிடி (ஒழுங்​கு​முறை மற்​றும் மேலாண்மை) சட்ட முன் வரைவு மசோதா 2009-ல் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. ÷இப்​பு​திய சட்ட முன் வரைவு மறை​மு​க​மாக அல்ல, ஒளி​வு​ம​றை​வாக கூட இல்​லா​மல் நேர​டி​யாக மீன​வர்​களை அழிப்​ப​தற்கு குறி வைத்து ஏவி​வி​டப்​பட்​டுள்​ளது. இச்​சட்ட முன்​வ​ரைவு நாடா​ளு​மன்​றத்​தில் சட்​ட​மாக நிறை​வேற்​றப்​பட்​டால் மீன​வர்​க​ளின் வாழ்​வு​ரிமை முற்​றி​லு​மா​கப் பாதிக்​கப்​ப​டும். மீன​வர்​க​ளின் இனமே கூண்​டோடு அழிக்​கப்​ப​டும். ஒடுக்​கு​மு​றை​யின் உச்​ச​மாக உள்ள இச்​சட்​டத்​தின் முக்​கி​யப் பிரி​வு​கள்   மீன​வர்​கள் 12 கடல் மைல்​க​ளுக்கு மேல் அதா​வது ஆழ்​க​ட​லுக்கு மீன்​பி​டிக்​கச் செல்​லக் கூடாது. மீறிச் சென்​றால் 3 ஆண்​டு​கள் சிறைத்​தண்​டனை அல்​லது 9 லட்​சம் ரூபாய் அப​ரா​தம் அல்​லது இரண்​டும் ஒரு சேர விதிக்​கப்​ப​டும். ரூ. 10,000-த்துக்கு மேல் மீன்​பி​டிக்​கக்​கூ​டாது. அப்​படி மீன்​பி​டிக்​கும்​பட்​சத்​தில் பட​கும், பிடிக்​கப்​பட்ட மீனும் மத்​திய அர​சால் பறி​மு​தல் செய்​யப்​ப​டும், ஏலம் விடப்​ப​டும். அப்​ப​ட​கில் உள்ள மீன​வர் தலா ஒவ்​வொ​ரு​வ​ருக்​கும் 25,000 ரூபாய் அப​ரா​தம் விதிக்​கப்​ப​டும். ÷எல்​லா​வற்​றுக்​கும் மேலாக அந்​நிய பன்​னாட்டு நிறு​வ​னம், அந்​நிய நிறு​வ​னத்​தின்  கப்​பல்​க​ளுக்கு ஆழ்​கட​லில் மீன்​பி​டிக்க அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளது. இதற்​காக பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளின் கப்​பல்​க​ளுக்கு அனு​மதி அளிக்​கும் கடித முறை ஏற்​கெ​னவே அம​லில் இருந்து வரு​கி​றது என்​பது குறிப்​பி​டத்​தக்​கது. ÷வெ​ளி​நாட்டு நிறு​வ​னங்​க​ளுக்கு நமது கட​லில் ஆராய்ச்சி செய்ய அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தச் சட்​டத்​தின்​படி மரபு வழி மீன​வர்​கள் எந்​தெந்த மாதங்​க​ளில் எந்​தெந்த மீன்​பி​டிக்க வேண்​டும், எவ்​வ​ளவு காலம் மீன்​பி​டிக்க வேண்​டும், எவ்​வ​ளவு மீன்​பி​டிக்க வேண்​டும் எந்​தக் கரு​வியை, எந்த அள​வுள்ள பட​கைப் பயன்​ப​டுத்தி எந்த இடத்​தில் மீன்​பி​டிக்க வேண்​டும் என்​பதை மத்​திய அரசு விதி​கள் மூல​மாக அறி​விக்​கும்.  கடல் மீன்​பிடி ஒழுங்​கு​மு​றைச் சட்​டத்​தின் நோக்​க​மாக தேசி​யப் பாது​காப்​புச் சட்​டம் ஒழுங்​கைக் காப்​ப​து என்று அறி​விக்​கப்​பட்​டுள்​ளது. தேசி​யப் பாது​காப்​புக் கரு​தியோ, சட்​டம் ஒழுங்​கைக் கார​ணம் காட்​டியோ படகு உரி​மை​யா​ள​ருக்கு அளிக்​கப்​பட்​டுள்ள அனு​ம​தியை ரத்து செய்​யும் அதி​கா​ரம் மத்​திய அர​சுக்கு உண்டு. ÷ஏற்​கெ​னவே கட​லோ​ரப் பாது​காப்​புப் படை​யி​ன​ரும் கப்​பல் படை​யி​ன​ரும் கட​லில் மீன்​பி​டிக்​கும் மீன​வ​ரைத் துன்​பு​றுத்தி வரு​கின்​ற​னர். இப்​போது இச்​சட்​டத்​தின்​படி தேசி​யப் பாது​காப்பு என்ற பெய​ரிலோ சட்​டம் ஒழுங்​குக்​குப் பாத​க​மா​கச் செயல்​பட்​டார் என்றோ கட​லோ​ரப் பாது​காப்​புப் படை​யி​ன​ரும் காவல்​து​றை​யி​ன​ரும் மீன​வ​ரைத் துன்​பு​றுத்​து​வது சட்​ட​பூர்​வ​மா​கி​வி​டும். அது தொடர்​க​தை​யா​கி​வி​டும். மேலி​ருக்​கும் சட்​டப்​பி​ரி​வு​க​ளைப் படிக்​கும் யாரும் நமது கட​லில் மீன்​பி​டிக்க பாரம்​ப​ரி​ய​மான மீன​வர்​க​ளுக்கு அனு​மதி இல்லை. பன்​னாட்டு நிறு​வ​னங்​க​ளுக்கு மட்​டுமே அனு​மதி அளிக்​கப்​ப​டு​கி​றது என்​ப​தைப் புரிந்​து​கொள்ள முடி​யும்.    நமது மீன​வர்​களை மீன்​பி​டிப்​புத் தொழிலி​லி​ருந்து விரட்டி அடிப்​ப​தற்​கான சட்​ட​பூர்வ முயற்​சியே இது. அன்று தேசத்​தின் விடு​த​லைக்​கா​கப் போரா​டி​ய​வர்​களை ஒடுக்​கு​வ​தற்​காக வெள்ளை ஏகா​தி​பத்​தி​யத்​தால் போடப்​பட்​டது, ரெüலட் என்ற ஒடுக்​கு​மு​றைச் சட்​டம். அதற்கு சற்​றும் குறைந்​த​தல்ல இச்​சட்​டம். இச்​சட்​டம் வந்​தால் மீன​வர்​கள் கடலி​லி​ருந்​தும் கடற்​க​ரையி​லி​ருந்​தும் விரட்​டி​ய​டிக்​கப்​ப​டு​வது நிச்​ச​யம். மீன​வர்​கள் மத்​தி​யில் பட்​டி​னிச்​சா​வு​கள் அதி​க​ரிக்​கும். கடல் வளத்​தை​யும், கடற்​க​ரை​யை​யும் பன்​னாட்டு நிறு​வ​னங்​கள் ஆக்​கி​ர​மித்​துக் கொள்​ளை​ய​டித்து முழு​வ​தை​யும் சுரண்​டப்​போ​வது நிச்​ச​யம்.   எனவே, எல்லா வகை​யி​லும் மீன​வ​ரின் வாழ்​வு​ரிமை கேள்​விக்​குள்​ளாக்​கப்​ப​டு​வது உறு​தி​யா​கி​விட்​டது. இப்​போது நாடு முழு​வ​தும் எழுந்த மீன​வர்​க​ளின் கடும் எதிர்ப்​பி​னால் சட்​ட​முன் வரை​வைத் தாற்​கா​லி​க​மாக நிறுத்தி வைப்​ப​தா​க​வும், ஆனால் திருத்​தங்​க​ளு​டன் கொண்டு வரப்​போ​வ​தா​க​வும் அறி​வித்​துள்​ளது, மீன​வர்​க​ளின் மனங்​க​ளின் நீங்​காத அச்​சத்தை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது. மீன​வர்​க​ளின் துயர் என்​று​தான் தீருமோ?

திங்கள், 14 டிசம்பர், 2009

.........


சனி, 12 டிசம்பர், 2009

மீனவர் பொது விசாரணை மன்றம்

தங்கச்சிமடத்தில் மீனவர் பொது விசாரணை மன்றம்

ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் நடந்த மீனவர் பொது விசாரணை மன்றத்தில் முன்னாள் கவர்னர், தலைமை நீதிபதி முன் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்கள் குமுறல்களை தெரிவித்தனர்.

மீனவர் உரிமை மீறலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் பொது விசாரணை தீர்ப்பாயம் மற்றும் மீனவர் மாநாடு நடந்தது. நிரபராதி மீனவர் கூட்டமைப்பு பிரதிநிதி அருளானந்தம் தலைமை வகித்தார். சேதுபதி நாட்டார் மாநாடு கொடியேற்றினார்.இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டிற்கு பலியான மீனவர்களின் நினைவு தூணை ராஜேந்திர நாட்டார் திறந்து வைத்தார்.

இதில் பங்கேற்ற தமிழக மீன்வளத்துறை அமைச்சர் சாமி பேசுகையில்,""1983 லிருந்து இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தாக்கி வருகிறது. தமிழக மீனவர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்சி பேதமில்லாமல் இணைந்து அனைவரும் செயலாற்ற வேண்டும்'' என்றார்.

ரித்திஷ்குமார் எம்.பி., ஹசன்அலி எம்.எல்.ஏ., மாவட்ட காங்., தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, முத்தரையர் மீனவர் சங்க தலைவர் செல்லத்துரை, பரவர் நலப்பேரவை தலைவர் சிப்பிசேசு, ஊராட்சி தலைவர் அருள் உட்பட பலர் பேசினர். இதை தொடர்ந்து மீனவர் பொது விசாரணை மன்றம் நடந்தது. கேரள முன்னாள் கவர்னர் சுகதேவ்சிங்கேங்க், முன்னாள் தலைமை நீதிபதி பார்கவா, காந்தி கிராம பல்கலை முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன் மற்றும் வக்கீல்கள் பங்கேற்றனர்.

இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட நாகபாண்டி(ராமேஸ்வரம்)முருகதாஸ்( பட்டுக்கோட்டை) குப்புசாமி (நாகப்பட்டினம்) தங்கச்சாமி(புதுக்கோட்டை) உட்பட14 மீனவர்கள் நடுக்கடலில் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.

மூன்று ஆண்டாக தலையில் துப்பாக்கி குண்டுடன் இருக்கும் காரைக்கால் மீனவர் சவுந்தர்ராஜ் பேசுகையில்,"" 2006 ல் நடுக்கடலில் இலங்கை கடற்படை சுட்டதில் உடலில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இன்னும் குண்டு சிதறல்கள் உள்ளன. உயிருக்கு ஆபத்து என்பதால் தலையில் இருக்கும் குண்டு சிதறலை இன்னும் எடுக்கவில்லை'' என்றார்.

திங்கள், 7 டிசம்பர், 2009

வெள்ளி, 30 அக்டோபர், 2009

மனித உரிமையை நிலைநாட்டிய நீதிமன்றம்

போலீஸ் உயர் அதிகாரிகள் 4 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை : போலீஸ் - வக்கீல் மோதல் சம்பவத்தில் ஐகோர்ட் தீர்ப்பு
அக்டோபர் 30,2009,00:00 IST

சென்னை : "ஐகோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவத்திற்கு முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முன்னாள் இணை கமிஷனர் ராமசுப்ரமணி, முன்னாள் துணை கமிஷனர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் காரணம். இவர்கள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

நியாயமான விசாரணை நடத்த ஏதுவாக, இவர்களை தற்காலிக பணி நீக்கம் செய்வதற்கு, அரசு தனது தனிப்பட்ட முடிவை செயல்படுத்த வேண்டும் என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும், இந்த போலீஸ் அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு, நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப் பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 19ம் தேதி, ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே பயங்கர மோதல் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. தானாக முன்வந்து கோர்ட் அவமதிப்பு வழக்கையும் எடுத்தது. தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வக்கீல் சங்கங்கள் தாக்கல் செய்த மனுக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க, நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதியை, ஐகோர்ட் தலைமை நீதிபதி கோகலே நியமித்தார். இந்த வழக்கில் 20 நாட்களாக விசாரணை நடந்தது.

வக்கீல்கள் சங்கங்கள் சார்பில் சீனியர் வக்கீல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பால் கனகராஜ், பிரபாகரன், என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை, பிரசன்னா, வேல்முருகன், டாக்டர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட சிலரும், அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல், போலீஸ் சார்பில் டில்லி சீனியர் வக்கீல் ராஜிவ் தவான், சி.பி.ஐ., தரப்பில் வக்கீல் சந்திரசேகரன், ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் சார்பில் சீனியர் வக்கீல் முத்துகுமாரசாமி ஆஜராகினர்.

மனுக்களை விசாரித்த நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பானுமதி அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: தவறு செய்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து கோர்ட் பிறப்பிக்கும் உத்தரவை, தமிழக அரசு பின்பற்றும் என அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

* இந்த உத்தரவில் குறிப்பிட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசு நியமித்த ஒரு நபர் கமிஷன் (சுந்தரதேவன் கமிஷன்) தொடர வேண்டுமா, இல்லையா என்பதை பரிசீலனை செய்ய வேண்டியது, அரசைப் பொறுத்தது.

* கடந்த பிப்ரவரி 19ம் தேதி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த சம்பவத்துக்கும், போலீஸ் நிலை உத்தரவு உள்ளிட்ட சட்ட விதிகளை மீறியதற்கும், முன்னாள் போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன், முன்னாள் கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், முன்னாள் இணை கமிஷனர் (வடக்கு) ராமசுப்ரமணி, பூக்கடை முன்னாள் துணை கமிஷனர் பிரேமானந்த் சின்கா ஆகியோர் பொறுப்பு.

* இந்த நான்கு அதிகாரிகள் மீதும் தமிழக அரசு சட்டப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை நடக்க ஏதுவாக, ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருக்கும் வரை இந்த நான்கு அதிகாரிகளையும் தற்காலிக பணி நீக்கம் செய்வதற்கு, அரசு தனது தனிப்பட்ட முடிவை செயல்படுத்துவது முறையாக இருக்கும்.

* பிப்ரவரி 19ம் தேதி, ஐகோர்ட் வளாகத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் அத்துமீறல் செய்ததாக இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* வக்கீல்கள், போலீசாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சட்டப்படி புலன் விசாரணையை சி.பி.ஐ., நடத்தலாம். இந்த வழக்குகளில் சி.பி.ஐ., புலன் விசாரணையை நடத்தி, மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

* நீதி நிர்வாகத்தில் இடையூறு ஏற்படுத்தியதற்காக அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், விஸ்வநாதன், ராமசுப்ரமணி, பிரேமானந்த் சின்கா மீது கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதற்கு ஆரம்ப முகாந்திரம் உள்ளது. எனவே, அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

* காயமடைந்த வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் மற்றும் சேதப்படுத்தப்பட்ட வக்கீல்கள் சங்க அலுவலகங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க, கூடுதலாக 58 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

508 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பு: பிற்பகல் 2.30 மணிக்கு முதலில் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, உத்தரவை வாசித்தார். அரை மணி நேரம் தீர்ப்பின் முக்கிய பக்கங்களை வாசித்தார். அதன் பின், நீதிபதி பானுமதி வாசித்தார். மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை இந்த உத்தரவை, நீதிபதிகள் இருவரும் வாசித்தனர். இந்த உத்தரவு 508 பக்கங்கள் அடங்கியதாக இருந்தது. தீர்ப்பை கேட்க கோர்ட் ஹாலுக்கு உள்ளேயும், வெளியிலும் வக்கீல்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர். நீதிபதிகள் உத்தரவை வாசித்து விட்டு சென்ற பின், வக்கீல்கள் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஐகோர்ட்டுக்கு வெளியில் பட்டாசு வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஞாயிறு, 31 மே, 2009

Indians' Money in Swiss Bank




Latest update after Swiss Bank has agreed to disclose the funds...

Our Indians' Money - 70, 00,000 Crores Rupees in Swiss Bank

1) Yes, 70 lakhs crores rupees of India are lying in Switzerland banks. This is the highest amount lying outside any country, from amongst 180 countries of the world, as if India is the champion of Black Money.

2) German Government has officially written to Indian Government that they (German Government) are willing to inform the details of holders of 70 lakh crore rupees in their Banks, if Indian Government officially asks them.

3) On 22-5-08, this news has already been published in The Times of India and other Newspapers based on German Government's official letter to Indian Government.

4) But the Indian Government has not sent any official enquiry to Germany for details of money which has been sent outside India from 1947 to 2008. The opposition party is also equally not interested in doing so because most of the amount is owned by politicians and it is every Indian's money.

5) This money belongs to our country. From these funds we can repay 13 times of our country's foreign debt... The interest alone can take care of the Centre's yearly budget. People need not pay any taxes and we can pay Rs. 1 lakh to each of 45 crore poor families.

6) Let us imagine, if Swiss Bank is holding Rs. 70 lakh crores, then how much money is lying in other 69 Banks? How much they have deprived the Indian people? Just think, if the Account holder dies, the bank becomes the owner of the funds in his account..

7) Are these people totally ignorant about the philosophy of Karma? What will this ill-gotten wealth do to them and their families when they own/use such money, generated out of corruption and exploitation?

8) Indian people have read and have known about these facts.. But the helpless people have neither time nor inclination to do anything in the matter. This is like "a new freedom struggle" and we will have to fight this.

9) This money is the result of our sweat and blood. The wealth generated and earned after putting in lots of mental and physical efforts by Indian people must be brought back to our country.

10) As a service to our motherland and you contribution to this struggle, please circulate at least 10 copies of this note amongst your friends and relatives and convert it into a mass movement.

திங்கள், 18 மே, 2009

தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார்


விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.

Where is Prabhakaran – GTN reporter:




Military spokesman Udaya Nanayakkara has stated there were no evidences of the rebel leader having been killed in the present offensive.

He said the rebels were now cornered to small strip of land and they believe Prabhakaran could also be among them.

Many questions have been raised as to where the elusive rebel leader could be and even a possibility of him having already left the island.

Reports state many of the Sinhalese people in the country were celebrating the day as the second independence for the country by lighting crackers and making Milk rice as the president landed in the country and kissed the soil.

With celebrations all around and rumours of the LTTE leader being killed, moves are still on to announce a complete victory by either killing Prabhakaran or Pottu Amman.

The real ground situation is reported to be very disturbing with hundreds of civilians being killed and accounted for as LTTE cadres.

Meanwhile some secret Military reports indicate over 2000 LTTE cadres were still fighting in Mulliwaikkal area.
updated - 2009-05-17
Source - office Reporter

பிரபாகரன் சந்தித்த “மரணங்கள்” 15
http://periyaryouth.blogspot.com/2009/05/15.html

பிரபாகரன் உயிரிழப்பு ?



யுத்ததாண்டவம் முடிவுக்கு வந்துள்ளதா? புலிகளின் முக்கியஸ்த்தர்கள் பலர் கொல்லப்பட்டனரா? இறுதியாகக் கிடைத்த தகவல்கள்:


விடுதலைப் புலிகளிடம் எஞ்சியிருந்த சிறு நிலப்பரப்பும் முழுமையாக கைப்பற்றப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் பாரிய மரண ஓலங்களின் மத்தியில் இன்று அதிகாலை ஆரம்பித்த கனரக ஆயுதத் தாக்குதல்கள் முடிவுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் மரணித்து காயமடைந்த நிலையில் மரணிக்காது சிகிச்சை பெற்று வந்த மக்கள் மற்றும் 300ற்கு மேற்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எல்லோரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு தகவலும் மற்றொரு தகவல் காயப்பட்ட புலிகளின் உறுப்பினர்கள் சையனைட் உட்கொண்டு மரணித்ததாக ஒரு தகவலும் தெரிவிக்கின்றது.

நேற்றிரவு ஐரோப்பிய நேரம் 11.30ற்கு இலங்கை நேரம் 3.00 மணிக்கு விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித் தேவனும் அரசியற் துறைப் பொறுப்பாளர் பா. நடேசனும் தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் ஆயிரம் வரையிலான காயமடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், சிவில் அலுவலர்கள், மற்றும் மக்கள் இருப்பதாகவும் அவர்களை மீட்குமாறும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.



இதேவேளை சில சர்வதேச சக்திகளின் ஆலோசனையின் பேரில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறையைச் சார்ந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்கள் சரணடைவதற்கு தயாராக இருந்ததாகவும் எனினும் படையினர் அவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அரசியற் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் புலித்தேவன், ஆகியோர் கொல்லப்பட்டு இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அத்துடன் உள்ளிருந்து இறுதியாக சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு வெளியேற முற்பட்டவர்களில் கேணல் றமேசும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இதற்கிடையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தாம் கொன்றுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளதாகவும் அவரது சடலம் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச ஆங்கில தொலைக்காட்சி செய்தி சேவை ஒன்று விடுதலைப்புலிகளின் தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பினரை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.

அத்துடன் அதன் பின்னர் புலிகளின் தலைவரின் உயிரிழப்பு தொடர்பாக முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியாகியுளள்தாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்த்தர்களான பா.நடேசன், புலித்தேவன், ரமேஸ், இளங்கோ, ஆகியோரின் சடலங்கள் எனக்கூறி இலங்கையின் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி உடனடிச் செய்திகளையும் காட்சிகளையும் ஒளிப்பரப்பி வருவதாகவும் ஆனால் மேற்கூறியவர்களின் சடலங்களுக்குரிய அடையாளங்கள் அதில் காணப்படவில்லை எனவும் எரியூண்ட சடலங்களின் காட்சிகள் ஒளிபரப்பப்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்றனி என சொல்லப்படும் ஒரு சடலமும் தொலைக்காட்சியில் காட்டப்படுவதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்று தென்னிலங்கையில் வெளியான பிரதான சி;ங்கள பத்திரிகை ஒன்று, புலிகளின் தளபதிகளான ரமேஸ், லோரன்ஸ் மற்றும் கரிகாலன் ஆகியோர் நேற்றிரவு தமது குடும்பங்களுடன் படையினரிடம் சரணடைந்தனர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆனால் ரமேஸ் கொல்லப்பட்டதாக இன்று பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.

இதேவேளை கொழும்பில் தமிழர்கள் சில சிங்களவர்களினால் அவமதிக்கும் பார்வையில் நோக்கப்படுவதாகவும் தமிழர்கள் தமிழில் உரையாற்றவும் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கொழும்பில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடும் பகுதிகளில் குறிப்பாக பெருபான்மையான தமிழர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கொழும்பு செட்டியார்த் தெரு உள்ள பிரதேசங்களில் இலங்கை தேசியக் கொடிகளை விற்பனை செய்து வரும் காட்சிகளை சர்வதேச தொலைக்காட்சி ஒன்று ஒளிப்பரப்பியதை காணக்கூடியதாக இருந்தது.

ஞாயிறு, 17 மே, 2009

மருத்துவ பராமரிப்பின்றி 25,000 தமிழர்கள் மரணம்: புலிகள் தளபதி சூசை

படுகாயமடைந்த 25 ஆயிரம் தமிழர்கள் மருத்துவ பராமரிப்பு இல்லாமல் பரிதாப மரணம்: களத்தில் இருந்து சூசை தகவல்
[ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 04:33 பி.ப]
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இரண்டு சதுர கிலோ மீற்றர் பகுதியிலேயே தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும் இப்பகுதியில் பெரும் தொகையான மக்கள் கொல்லப்பட்டு, உடலங்கள் குவியல் குவியலாகக் காணப்படுவதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை தெரிவித்திருக்கின்றார்.
'அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் இன்றைய அவலத்துக்கு காரணம்': செ.பத்மநாதன் அவசர அறிக்கை
[ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 03:32 பி.ப]
"வன்னியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை மரணத்தின் பிடியில் இருந்து பாதுகாக்குமாறு உலகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும் அனைத்துலக சமூகத்தின் மெளனம்தான் சிறிலங்கா இராணுவம் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க ஊக்குவித்தது கசப்பான முடிவுக்கே கொண்டு சென்றுள்ளது" என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
இடைவிடாது குண்டு மழை பொழியும் சிறிலங்கா படையினர்: மரண பூமியாக மாறியுள்ள முள்ளிவாய்க்கால்
[ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009, 08:32 மு.ப]
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியை நான்கு புறங்களிலும் சுற்றிவளைத்துள்ள சிறிலங்கா படையினர் பொதுமக்கள் மிகவும் அடர்த்தியாக வசிக்கும் சிறிய பகுதி மீது இடைவிடாது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பொழிந்து கொண்டிருப்பதாக இன்று காலை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வவுனியா, ஞாயிறு, 17 மே 2009( 17:34 IST )
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் தற்போது கடுமையான போர் நடைபெற்று வருவதாகவும், மருத்துவ பராமரிப்பின்றி அங்கு 25 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்து விட்டதாகவும் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல்சூசை அனைத்துலக ஊடகங்களுக்காக இன்று தொலைபேசியில் விடுத்துள்ள தகவலில், படுகாயமடைந்த 25,000 பேரையும் இரட்டைவாய்க்கால் அல்லது வட்டுவாகல் பகுதி ஊடாக வெளியே கொண்டு வருவதற்கு அனைத்துலகப் பொறுப்பாளர் செ.பத்மநாதன் மூலமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் நாம் கோரிக்கை முன்வைத்தோம். ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடமும் கேட்டுக் கொண்டோம். காயமடைந்தவர்களை அனுப்பி வைக்கிறோம் நீங்கள் அவர்களை பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள் எனக் கேட்டோம். இருந்த போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை. தற்போது அந்த 25,000 மக்களும் மருத்துவ சிகிச்சைகள் இல்லாமல் மரணம் அடைந்திருக்கின்றனர் என மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் சூசை தெரிவித்துள்ளார். சுமார் 2 கி.மீ. சதுர நிலப்பரப்புக்குள் பெரும் தொகையான உடலங்கள் குவியலாகவும் சிதறுண்டும் காணப்படுகின்றது. ஏனையவர்கள் சிறிலங்க படையினர் பயன்படுத்தும் கடுமையான ஆயுதங்களுக்கு அஞ்சி பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருக்கின்றனர்.போர் நடைபெறும் பகுதியில் இருந்து மக்கள் தப்பிச் செல்வதற்கு கூட சிறிலங்கா படையினர் அனுமதிப்பது இல்லை எனவும் குறிப்பிட்ட சூசை, அந்த மக்களை சுட்டுக் கொன்று விடுவதற்குத்தான் அவர்கள் முயல்கின்றனர் எனவும் சூசை குற்றம் சாற்றியுள்ளார். இங்கு என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி எந்த அக்கறையும் இல்லாததாகவே அனைத்துலக சமூகம் இருக்கிறது. தற்போது படுகாயமடைந்திருக்கும் 25,000 மக்களைவிட மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்துள்ளார். சிறிலங்கப் படையினருடன் புலிகள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இறுதி வரையில் நாம் அடிபணியப் போவதில்லை. கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அதற்குள் பொதுமக்களும் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை குறிப்பிட்டார்.அனைத்துலக சமூகம் திரும்பிப் பார்க்கவில்லை. நாங்கள் நேற்று முன்தினம் இரவு முதல் உதவி கேட்டுக் கொண்டிருக்கின்றோம். தற்போது இன்னும் 20,000 மக்கள் வரை காயம்பட்டிருக்கின்றனர். அதனைவிட மற்றவர்கள் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர். படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் அனைவரும் பதுங்கு குழிகளுக்குள் இருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.போர் இப்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. 2 கி.மீ. சதுர நிலப் பரப்புக்குள் பரவலாக எறிகணைத் தாக்குதலை படையினர் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எனவும் சூசை தெரிவித்தார்.இதேவேளையில் வன்னியில் இருந்து கிடைக்கும் செய்திகளின்படி முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள சுமார் ஒன்றரை லட்சம் மக்களையும் அங்கிருந்து வெளியேறவிடாது சிறிலங்கா படையினர் கடுமையான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பு வலயத்தில் பொதுமக்கள் இப்போது இல்லை எனவும் அவர்கள் அனைவரும் வெளியேறி விட்டனர் என்றும் ஒரு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது சிறிலங்கா அரசாங்கம்.இதனை வைத்துப் பார்க்கும்போது அங்குள்ள அனைவரையும் கொன்று ஒழிப்பதுதான் சிறிலங்க அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. போர்ப் பகுதிகளில் இருந்து மக்கள் வெளியே வருவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து அறிவித்து வருகின்ற போதிலும், அங்குள்ள மக்கள் வெளியேறுவதற்கு எந்தவிதமான சந்தர்ப்பத்தையும் கொடுக்காமல் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்கால் பகுதியில் சரித்திரத்தில் இல்லாதளவுக்கு பாரிய மனிதப் பேரவலம் ஒன்று இப்போது நிகழ்ந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் உறுதிப்படுத்துவதாக புதினம் இணையதளம் தெரிவித்துள்ளது.

சனி, 16 மே, 2009

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள்




தமிழ்நாடு இறுதி முடிவுகள்


Tamilnadu Results
Symbol Party
Name
No.of Seats Leading No of Seats won
DMK + Alliance 0 28
ADMK+Alliance 0 12
DMDK 0 0
BJP+Alliance 0 0
Others 0 0
Total 25 13

All India Parties
Symbol Party
Name
No.of Seats Leading No of Seats won
Congress + Alliance 197 58
BJP + Alliance 127 35
Third Front 67 15
Forth Front 26 1
Others 12 5
Total 429 114



சிவகங்கை தொகுதியில் காங்., வேட்பாளர் சிதம்பரம் வெற்றி
மே 16,2009,18:36 IST



சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் சிதம்பரம், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ கண்ணப்பனை 3354 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். சிதம்பரம் பெற்ற ஓட்டுகள் 3,34,348. அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ கண்ணப்பன் பெற்ற ஓட்டுகள் 3,30,994.


ஈரோட்டில் ம.தி.மு.க., வேட்பாளர் கணேச மூர்த்தி வெற்றி
மே 16,2009,18:31 IST



ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி ம.தி.மு.க., வேட்பாளர் கணேச மூர்த்தி 49,336 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற ஓட்டுகள் 2,84,148. அவருக்கு அடுத்தபடியாக காங்., வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்ற ‌ஓட்டுகள் 2,34,812.


மத்திய சென்னையில் தயாநிதி வெற்றி
மே 16,2009,18:27 IST



மத்திய சென்னை: மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தயாநிதி, 33,454 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தயாநதி பெற்ற ஓட்டுகள் 2,85,723. அவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க., வேட்பாளர் முகமது அலி ஜின்னா பெற்ற ஓட்டுகள் 2,52,329.


சோனியா, மன்மோகனுக்கு அத்வானி வாழ்த்து
மே 16,2009,18:23 IST



புதுடில்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார்‌.


தீவிர அரசியலிலிருந்து விலக அத்வானி முடிவு?
மே 16,2009,18:21 IST



புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அத்வானி எதிர்கட்சித் தலைவராக இருக்க மாட்டார் என்றும் தீவிர அரசியலிலிருந்தே அவர் விலக முடிவு செய்திருப்பதாகவு்ம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர். பாலு வெற்றி
மே 16,2009,18:19 IST



ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் டி.ஆர். பாலு 25, 036 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற ஓட்டுகள் 3,52,641. அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி பெற்ற ஓட்டுகள் 3,27,605.


காங்கிரஸ் அணி 174 இடங்களில் வெற்றி; பா.ஜ., அணி- 110; 3வது அணி- 47
மே 16,2009,18:15 IST



புதுடில்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக துவங்கி உள்ளன. மாலை 6 மணி நிலவரப்படி காங்கிரஸ் அணி 173 தொகுதிகளிலும் பா.ஜ. அணி 109 தொகுதிகளிலும் 3வது அணி 47 தொகுதிகளிலும் மற்றவர்கள் 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தில் தி.மு.க., அணி 29 தொகுதிகளிலும் அ.தி.மு.க., அணி 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.


நாமக்கலில் தி.மு.க., காந்தி செல்வன் வெற்றி
மே 16,2009,18:10 IST



நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் காந்தி செல்வன் 1,02,431 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் வைரம் தமிழரசியை தோற்கடித்துள்ளார். காந்தி செல்வன் பெற்ற ஓட்டுகள் 3,71,476. வைரம் தமிழரசி பெற்ற ஓட்டுகள் 2,69,045.


அரக்கோணம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி
மே 16,2009,18:05 IST



அரக்கோணம் : அரக்கோணம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 1,09,796 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ம.க., வேட்பாளர் வேலுவை தோற்கடித்துள்ளார். ஜெகத்ரட்சகன் பெற்றுள்ள ஓட்டுகள் 4,15,041. பா.ம.க., வேட்பாளர் வேலு பெற்ற ஓட்டுகள் 3,05,245.


கரூரில் அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை வெற்றி
மே 16,2009,17:57 IST



கரூர்: கரூர் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை, 49,149 ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளர் கே.சி. பழனிச்சாமியை தோற்கடித்தார். தம்பிதுரை பெற்ற ஓட்டுகள் 3,80,461. அவரை எதிர்த்து போட்டியிட்ட பழனிச்சாமி பெற்ற ஓட்டுகள் 3,31,312.


கிருஷ்ணகிரியில் தி.மு.க., வேட்பாளர் ஈ.ஜி. சுகவனம் வெற்றி
மே 16,2009,17:49 IST



கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஈ.ஜி. சுகவனம், 76598 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற ஓட்டுகள் 3,35,977. இரண்டாம் இடம் பிடித்துள்ள அ.தி.மு.க., வேட்பாளர் நஞ்சே கவுடு பெற்ற ஓட்டுகள் 2,59,379.


விழுப்புரத்தில் அ.தி.மு.க., வெற்றி
மே 16,2009,17:33 IST



விழுப்பும்: விழுப்புரம் தொகுதி‌யில் அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன் 2,897 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனந்தன் பெற்ற ஓட்டுகள் 306826. அவரை எதிர்த்து போட்டியிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சாமிதுரை 304029 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.


ஆரணியில் காங்., வேட்பாளர் கிருஷ்ணசாமி வெற்றி
மே 16,2009,17:31 IST



ஆரணி : ஆரணி தொகுதியில் காங்., வேட்பாளர் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற ஓட்டுகள் 3,96,728. அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சுப்ரமணியன் 2,89,898 ஓட்டுகள் பெற்று, 1,06,830 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.


சிதம்பரத்தில் விடுதலைசிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் வெற்றி
மே 16,2009,17:23 IST



சிதம்பரம்: சிதம்பரம் லோக்சபா தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் திருமாவளவன் 428804 ஓட்டுகள் பெற்று, 99083 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் இ. பொன்னுசாமி 329721 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


ராமநாதபுரத்தில் தி.மு.க., வேட்பாளர் ரித்தீஷ் வெற்றி
மே 16,2009,17:18 IST



ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் ரித்தீஷ் 294945 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சத்திய மூர்த்தி 225030 ஓட்டுகள் பெற்றுள்ளார். ரித்தீஷ் 69915 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


திருவள்ளூரில் அ.தி.மு.க., வேட்பாளர் வேணுகோபால் வெற்றி
மே 16,2009,17:16 IST



திருவள்ளூர்: திருவள்ளூரில் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க., வேட்பாளர் வேணுகோபால் 31673 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருவள்ளூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் வேணுகோபால் பெற்ற ஓட்டுகள் 3,68,294. தி.மு.க., வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் 3,36,621. அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் வேணுகோபால் 31,673 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


திருவண்ணாமலையில் தி.மு.க., வேணுகோபால் வெற்றி
மே 16,2009,17:08 IST



திருவண்ணாமலை: திருவண்ணாமலை லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் வேணுகோபால் 4,36,866 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பா.ம.க., வேட்பாளர் காடுவெட்டி குரு 2,88,566 ஓட்டுகள் பெற்றுள்ளார், தே.மு.தி.க., வேட்பாளர் மணிகண்டன் 56,960 ஓட்டுகள் ‌பெற்றுள்ளார்.


வேலூரில் தி.மு.க., வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி
மே 16,2009,16:53 IST



வேலூர்: வேலூரில் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அப்துல் ரகுமான் 3,60,474 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் .


சேலத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் செம்மலை வெற்றி
மே 16,2009,16:46 IST



சேலம்: சேலம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் செம்மலை 46252 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார் . செம்மலை 30,460 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் தங்கபாலு 3,33,969 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


தென்காசியில் இ.கம்யூ., வேட்பாளர் லிங்கம் வெற்றி
மே 16,2009,16:43 IST



தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதியில் இ.கம்‌யூ வேட்பாளர் பொ.லிங்கம் 2,81,174 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் 2,46,497 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


தேனியில் காங்., வேட்பாளர் ஆருண் ரஷீத் வெற்றி
மே 16,2009,16:36 IST



தேனி: தேனி லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் ஆருண் ரஷித் 3,40,575 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்‌. அ.தி.மு.க., வேட்பாளர் 3,33,273 ஓட்டுகள் பெற்றார் . 6302 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.


திருப்பூரில் அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வெற்றி
மே 16,2009,16:32 IST



திருப்பூர்: திருப்பூர் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி 85346 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 731 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்வேந்தன் 2 லட்சத்து 10 ஆயிரத்து 385 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


திருநெல்வேலியில் காங்., வேட்பாளர் ராமசுப்பு வெற்றி
மே 16,2009,16:30 IST



திருநெல்வேலி: திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு 2,74,932 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் 2,53,675 ஓட்டுகள் பெற்றார். தே.மு.தி.க., 94,562 ஓ‌ட்டுகளும் , சமத்துவ மக்கள் கட்சி 39997 ஓட்டுகளும் பெற்றுள்ளன .


தர்மபுரியில் தி.மு.க., வேட்பாளர் தாமரைசெல்வன் வெற்றி
மே 16,2009,16:29 IST



தர்மபுரி: தர்மபுரி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தாமரைசெல்வன் 135942 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற ஓட்டுகள் 365812. அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க, வேட்பாளர் செந்தில் 229870 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


திண்டுக்கல்லில் காங்.,‌ வேட்பாளர் சித்தன் வெற்றி
மே 16,2009,16:28 IST



திண்டுக்கல்: திண்டுக்கல் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தன் 54,347 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.


பெரம்பலூரில் தி.மு.க., வேட்பாளர் நெப்போலியன் வெற்றி
மே 16,2009,16:18 IST



பெரம்பலூர்: பெரம்பலூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் நெப்போலியன் 3,98,742 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் பாலசுப்பிரமணியம் 3,21,138 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


மயிலாடுதுறையில் அ. தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ். மணியன் வெற்றி
மே 16,2009,15:48 IST



மயிலாடுதுறை: மயிலாடுதுறை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ. தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ். மணியன் 3,64,089 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


பொள்ளாச்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் சுகுமார் வெற்றி
மே 16,2009,15:45 IST



பொள்ளாச்சி: பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க, வேட்பாளர் சுகுமார் 46025 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 305935 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம் 259910 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


கன்னியாகுமரியில் தி.மு.க., வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் வெற்றி
மே 16,2009,15:43 IST



கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் 3,20,161 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ., வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 2,54,474 ஓட்டுகள் பெற்றுள்ளார்.மார்‌க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் பெல்லார்மின் 85,583 ஓட்டுகளும், தே.முதி.க., வேட்பாளர் ஆஸ்டின் 68,472 ஓட்டுகளும் பெற்றுள்ளனர்.


தஞ்சாவூரில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் வெற்றி
மே 16,2009,15:35 IST



தஞ்சாவூர்: தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 101787 ஓட‌்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 408343 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ம.தி.மு.க., வேட்பாளர் துரை பாலகிருஷ்ணன் 306556 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


தென்சென்னையில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி
மே 16,2009,15:35 IST



தென்சென்னை: தென்சென்னை லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன் 32,446 ஓட்டுகள் பெற்ற பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த ஓட்டுகள் 2,98,739. தி.மு.க., வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி 2,66,293 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வெற்றி
மே 16,2009,15:17 IST



கோவை: கோவை லோக்சபா தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் பி.ஆர். நடராஜன் 293165 ஓட்டுகள் பெற்று 38664 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்ந்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் பிரபு 2, 54,501 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


வாஜ்பாய் பிரசாரம் செய்யாதது பாதிப்பை ஏற்படுத்தியது: ராஜ்நாத்சிங்
மே 16,2009,15:05 IST



புதுடில்லி லோக்சபா தேர்தலில் வாஜ்பாய் பிரசாரம் செய்யாதது, பா.ஜ.,வுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்று பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


நாகப்பட்டினம்(தனி) தி.மு.க., வேட்பாளர் ஏ.கே.எஸ்., விஜயன் வெற்றி
மே 16,2009,15:03 IST



நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் 47962 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் . விஜயன் மொத்தம் 3,69,915 ஓட்டு பெற்றுள்ளார் .


நீலகிரி(தனி) தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா வெற்றி
மே 16,2009,15:00 IST



நீலகிரி: நீலகிரி(தனி) லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் ராசா 86000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் .


திருச்சியில் அ.தி.மு.க., குமார் வெற்றி
மே 16,2009,14:53 IST



திருச்சி: திருச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க., வேட்பாளர் குமார் 2900 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


கள்ளக்குறிச்சியில் தி.மு.க., வேட்பாளர் ஆதி சங்கர் வெற்றி
மே 16,2009,14:52 IST



கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆதி சங்கர் 290385 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பா.ம.க., தன்ராஜ் 208138 ஓட்டுகள் பெற்றார்.


காஞ்சிபுரத்தில் காங்., வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி
மே 16,2009,14:46 IST



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 3,103 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள ஓட்டுகள் 3,30,237 ஆகும். அ.தி.மு.க., வேட்பாளர் ராமகிருஷ்ணன் 3,17,134 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


தூத்துக்குடியில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை வெற்றி
மே 16,2009,14:40 IST



தூத்துக்குடி: தூத்துக்கடி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை 76,649 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஜெயதுரை 3,11,017 ஓட்டுகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் சிந்தியா பாண்டியன் 2,34,368ஓட்டுகள் பெற்றுள்ளார்.


விருதுநகர் தொகுதியில் காங்., வேட்பாளர் மாணிக்தாக்கூர் வெற்றி
மே 16,2009,14:30 IST



விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாக்கூர் 16 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 3,06,187 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ம.தி.மு.க., வேட்பாளர் வைகோ 291089 ஓட்டுகள் பெற்றுள்ளார். கார்த்திக் 17,236 ஓட்டுகள் பெற்றுள்ளார். தே.மு.தி.க., வேட்பாளர் பாண்டியராஜன் 1,25,229 ஓட்டுகள் பெற்றுள்ளார். மாணிக்க தாக்கூருக்கு ஆயிரம் தபால்‌ ஓட்டுகளும் வைகோவுக்கு 344 தபால் ஓட்டுகளும் கிடைத்தன.


ஏழை மக்களுக்காக பாடுபடுவேன் : அழகிரி
மே 16,2009,14:28 IST



மதுரை : ஏழை மக்களுக்காக பாடுபடுவேன் என மதுரை லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க வேட்பாளர் அழகிரி கூறியுள்ளார். வெற்றிக்கு பின் பேட்டியளித்த அவர் சென்னையை போல பல வளர்ச்சி திட்டங்களை மதுரைக்கு கொண்டு வருவேன், ஏழை மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் எனவும், மதுரையில் ஓட்டு சதவீதம் குறைந்ததற்கு தேர்தல் கமிஷனின் கெடுபிடியே காரணம் எனவும் கூறினார். மேலும் தனக்கு அமைச்சர் பதவி தருவது குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என கூறினார்


கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். அழகிரி வெற்றி
மே 16,2009,14:19 IST



கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் அழகிரி 313736 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத் 296418 ஓட்டுகள் பெற்றார். 23,318 ஓட்டுகள் வித்தியாசத்தில் கே.எஸ். அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.


மதுரையில் தி.மு.க., வேட்பாளர் அழகிரி வெற்றி
மே 16,2009,14:12 IST



மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அழகிரி 1,40,985 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மதுரை லோக்சபா தொகுதியில் மொத்தம் பதிவான ஓட்டுகள் 7,90,679 . அழகிரி பெற்ற ஓட்டுகள் 4, 31,295. மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் மோகன் 2,90,310 ஓட்டுகள் பெற்றுள்ளார். தே.மு.தி.க., வேட்பாளர் கவியரசு 54,419 ஓட்டுகளை பெற்றுள்ளார்.


புதுச்சேரியில் நாராயணசாமி வெற்றி
மே 16,2009,13:45 IST



புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 85 ஆயிரத்து 612 ஓட்டு வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


UPA Lead Won Total
INC 57 146 203
DMK 2 16 18
NCP 1 8 9
JKN 0 3 3
OTH 27 0 27
TOTAL 87 173 260


NDA
Lead Won Total
BJP 29 92 121
SHS 1 10 11
JD(U) 11 9 20
SAD 0 4 4
OTH 3 4 7
TOTAL 44 119 163


THIRD
Lead Won Total
CPM 11 6 17
JD(S) 0 3 3
BSP 23 1 24
BJD 14 0 14
OTH 10 0 10
TOTAL 58 10 68


FOURTH
Lead Won Total
ADMK 5 3 8
SP 23 0 23
IND 9 0 9
RJD 2 0 2
OTH 3 0 3
TOTAL 42 3 45