சிவகங்கை தொகுதியில் காங்., வேட்பாளர் சிதம்பரம் வெற்றி | மே 16,2009,18:36 IST |
|
|
| சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் சிதம்பரம், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ கண்ணப்பனை 3354 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். சிதம்பரம் பெற்ற ஓட்டுகள் 3,34,348. அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ கண்ணப்பன் பெற்ற ஓட்டுகள் 3,30,994. |
|
| |
ஈரோட்டில் ம.தி.மு.க., வேட்பாளர் கணேச மூர்த்தி வெற்றி | மே 16,2009,18:31 IST |
|
|
| ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி ம.தி.மு.க., வேட்பாளர் கணேச மூர்த்தி 49,336 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற ஓட்டுகள் 2,84,148. அவருக்கு அடுத்தபடியாக காங்., வேட்பாளரும் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெற்ற ஓட்டுகள் 2,34,812. |
|
| |
மத்திய சென்னையில் தயாநிதி வெற்றி | மே 16,2009,18:27 IST |
|
|
| மத்திய சென்னை: மத்திய சென்னை லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தயாநிதி, 33,454 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தயாநதி பெற்ற ஓட்டுகள் 2,85,723. அவருக்கு அடுத்தபடியாக அ.தி.மு.க., வேட்பாளர் முகமது அலி ஜின்னா பெற்ற ஓட்டுகள் 2,52,329. |
|
| |
சோனியா, மன்மோகனுக்கு அத்வானி வாழ்த்து | மே 16,2009,18:23 IST |
|
|
| புதுடில்லி: லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றிக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார். |
|
| |
தீவிர அரசியலிலிருந்து விலக அத்வானி முடிவு? | மே 16,2009,18:21 IST |
|
|
| புதுடில்லி: லோக்சபா தேர்தலில் பா.ஜ., தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, அத்வானி எதிர்கட்சித் தலைவராக இருக்க மாட்டார் என்றும் தீவிர அரசியலிலிருந்தே அவர் விலக முடிவு செய்திருப்பதாகவு்ம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
|
| |
ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர். பாலு வெற்றி | மே 16,2009,18:19 IST |
|
|
| ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் டி.ஆர். பாலு 25, 036 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற ஓட்டுகள் 3,52,641. அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி பெற்ற ஓட்டுகள் 3,27,605. |
|
| |
காங்கிரஸ் அணி 174 இடங்களில் வெற்றி; பா.ஜ., அணி- 110; 3வது அணி- 47 | மே 16,2009,18:15 IST |
|
|
| புதுடில்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக துவங்கி உள்ளன. மாலை 6 மணி நிலவரப்படி காங்கிரஸ் அணி 173 தொகுதிகளிலும் பா.ஜ. அணி 109 தொகுதிகளிலும் 3வது அணி 47 தொகுதிகளிலும் மற்றவர்கள் 26 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. தமிழகத்தில் தி.மு.க., அணி 29 தொகுதிகளிலும் அ.தி.மு.க., அணி 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. |
|
| |
நாமக்கலில் தி.மு.க., காந்தி செல்வன் வெற்றி | மே 16,2009,18:10 IST |
|
|
| நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் காந்தி செல்வன் 1,02,431 ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் வைரம் தமிழரசியை தோற்கடித்துள்ளார். காந்தி செல்வன் பெற்ற ஓட்டுகள் 3,71,476. வைரம் தமிழரசி பெற்ற ஓட்டுகள் 2,69,045. |
|
| |
அரக்கோணம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வெற்றி | மே 16,2009,18:05 IST |
|
|
| அரக்கோணம் : அரக்கோணம் தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 1,09,796 ஓட்டுகள் வித்தியாசத்தில் பா.ம.க., வேட்பாளர் வேலுவை தோற்கடித்துள்ளார். ஜெகத்ரட்சகன் பெற்றுள்ள ஓட்டுகள் 4,15,041. பா.ம.க., வேட்பாளர் வேலு பெற்ற ஓட்டுகள் 3,05,245. |
|
| |
கரூரில் அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை வெற்றி | மே 16,2009,17:57 IST |
|
|
| கரூர்: கரூர் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை, 49,149 ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க., வேட்பாளர் கே.சி. பழனிச்சாமியை தோற்கடித்தார். தம்பிதுரை பெற்ற ஓட்டுகள் 3,80,461. அவரை எதிர்த்து போட்டியிட்ட பழனிச்சாமி பெற்ற ஓட்டுகள் 3,31,312. |
|
| |
கிருஷ்ணகிரியில் தி.மு.க., வேட்பாளர் ஈ.ஜி. சுகவனம் வெற்றி | மே 16,2009,17:49 IST |
|
|
| கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஈ.ஜி. சுகவனம், 76598 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற ஓட்டுகள் 3,35,977. இரண்டாம் இடம் பிடித்துள்ள அ.தி.மு.க., வேட்பாளர் நஞ்சே கவுடு பெற்ற ஓட்டுகள் 2,59,379. |
|
| |
விழுப்புரத்தில் அ.தி.மு.க., வெற்றி | மே 16,2009,17:33 IST |
|
|
| விழுப்பும்: விழுப்புரம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன் 2,897 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனந்தன் பெற்ற ஓட்டுகள் 306826. அவரை எதிர்த்து போட்டியிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சாமிதுரை 304029 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். |
|
| |
ஆரணியில் காங்., வேட்பாளர் கிருஷ்ணசாமி வெற்றி | மே 16,2009,17:31 IST |
|
|
| ஆரணி : ஆரணி தொகுதியில் காங்., வேட்பாளர் கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற ஓட்டுகள் 3,96,728. அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சுப்ரமணியன் 2,89,898 ஓட்டுகள் பெற்று, 1,06,830 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். |
|
| |
சிதம்பரத்தில் விடுதலைசிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் வெற்றி | மே 16,2009,17:23 IST |
|
|
| சிதம்பரம்: சிதம்பரம் லோக்சபா தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் திருமாவளவன் 428804 ஓட்டுகள் பெற்று, 99083 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் இ. பொன்னுசாமி 329721 ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
ராமநாதபுரத்தில் தி.மு.க., வேட்பாளர் ரித்தீஷ் வெற்றி | மே 16,2009,17:18 IST |
|
|
| ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் ரித்தீஷ் 294945 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சத்திய மூர்த்தி 225030 ஓட்டுகள் பெற்றுள்ளார். ரித்தீஷ் 69915 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். |
|
| |
திருவள்ளூரில் அ.தி.மு.க., வேட்பாளர் வேணுகோபால் வெற்றி | மே 16,2009,17:16 IST |
|
|
| திருவள்ளூர்: திருவள்ளூரில் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க., வேட்பாளர் வேணுகோபால் 31673 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திருவள்ளூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் வேணுகோபால் பெற்ற ஓட்டுகள் 3,68,294. தி.மு.க., வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் 3,36,621. அ.தி.மு.க., வேட்பாளர் டாக்டர் வேணுகோபால் 31,673 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். |
|
| |
திருவண்ணாமலையில் தி.மு.க., வேணுகோபால் வெற்றி | மே 16,2009,17:08 IST |
|
|
| திருவண்ணாமலை: திருவண்ணாமலை லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் வேணுகோபால் 4,36,866 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பா.ம.க., வேட்பாளர் காடுவெட்டி குரு 2,88,566 ஓட்டுகள் பெற்றுள்ளார், தே.மு.தி.க., வேட்பாளர் மணிகண்டன் 56,960 ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
வேலூரில் தி.மு.க., வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி | மே 16,2009,16:53 IST |
|
|
| வேலூர்: வேலூரில் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அப்துல் ரகுமான் 3,60,474 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . |
|
| |
சேலத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் செம்மலை வெற்றி | மே 16,2009,16:46 IST |
|
|
| சேலம்: சேலம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் செம்மலை 46252 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார் . செம்மலை 30,460 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் தங்கபாலு 3,33,969 ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
தென்காசியில் இ.கம்யூ., வேட்பாளர் லிங்கம் வெற்றி | மே 16,2009,16:43 IST |
|
|
| தென்காசி: தென்காசி லோக்சபா தொகுதியில் இ.கம்யூ வேட்பாளர் பொ.லிங்கம் 2,81,174 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் 2,46,497 ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
தேனியில் காங்., வேட்பாளர் ஆருண் ரஷீத் வெற்றி | மே 16,2009,16:36 IST |
|
|
| தேனி: தேனி லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் ஆருண் ரஷித் 3,40,575 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் 3,33,273 ஓட்டுகள் பெற்றார் . 6302 ஓட்டுகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. |
|
| |
திருப்பூரில் அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வெற்றி | மே 16,2009,16:32 IST |
|
|
| திருப்பூர்: திருப்பூர் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி 85346 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 2 லட்சத்து 95 ஆயிரத்து 731 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கார்வேந்தன் 2 லட்சத்து 10 ஆயிரத்து 385 ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
திருநெல்வேலியில் காங்., வேட்பாளர் ராமசுப்பு வெற்றி | மே 16,2009,16:30 IST |
|
|
| திருநெல்வேலி: திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு 2,74,932 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளர் 2,53,675 ஓட்டுகள் பெற்றார். தே.மு.தி.க., 94,562 ஓட்டுகளும் , சமத்துவ மக்கள் கட்சி 39997 ஓட்டுகளும் பெற்றுள்ளன . |
|
| |
தர்மபுரியில் தி.மு.க., வேட்பாளர் தாமரைசெல்வன் வெற்றி | மே 16,2009,16:29 IST |
|
|
| தர்மபுரி: தர்மபுரி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் தாமரைசெல்வன் 135942 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்ற ஓட்டுகள் 365812. அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க, வேட்பாளர் செந்தில் 229870 ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
திண்டுக்கல்லில் காங்., வேட்பாளர் சித்தன் வெற்றி | மே 16,2009,16:28 IST |
|
|
| திண்டுக்கல்: திண்டுக்கல் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தன் 54,347 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். |
|
| |
பெரம்பலூரில் தி.மு.க., வேட்பாளர் நெப்போலியன் வெற்றி | மே 16,2009,16:18 IST |
|
|
| பெரம்பலூர்: பெரம்பலூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் நெப்போலியன் 3,98,742 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் பாலசுப்பிரமணியம் 3,21,138 ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
மயிலாடுதுறையில் அ. தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ். மணியன் வெற்றி | மே 16,2009,15:48 IST |
|
|
| மயிலாடுதுறை: மயிலாடுதுறை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ. தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ். மணியன் 3,64,089 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். |
|
| |
பொள்ளாச்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் சுகுமார் வெற்றி | மே 16,2009,15:45 IST |
|
|
| பொள்ளாச்சி: பொள்ளாச்சி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க, வேட்பாளர் சுகுமார் 46025 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் மொத்தம் 305935 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் சண்முகசுந்தரம் 259910 ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
கன்னியாகுமரியில் தி.மு.க., வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் வெற்றி | மே 16,2009,15:43 IST |
|
|
| கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் 3,20,161 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ., வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் 2,54,474 ஓட்டுகள் பெற்றுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் பெல்லார்மின் 85,583 ஓட்டுகளும், தே.முதி.க., வேட்பாளர் ஆஸ்டின் 68,472 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். |
|
| |
தஞ்சாவூரில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் வெற்றி | மே 16,2009,15:35 IST |
|
|
| தஞ்சாவூர்: தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 101787 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 408343 ஓட்டுகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ம.தி.மு.க., வேட்பாளர் துரை பாலகிருஷ்ணன் 306556 ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
தென்சென்னையில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன் வெற்றி | மே 16,2009,15:35 IST |
|
|
| தென்சென்னை: தென்சென்னை லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன் 32,446 ஓட்டுகள் பெற்ற பெற்றுள்ளார். இவர் பெற்ற மொத்த ஓட்டுகள் 2,98,739. தி.மு.க., வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதி 2,66,293 ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் பி.ஆர். நடராஜன் வெற்றி | மே 16,2009,15:17 IST |
|
|
| கோவை: கோவை லோக்சபா தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் பி.ஆர். நடராஜன் 293165 ஓட்டுகள் பெற்று 38664 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்ந்து போட்டியிட்ட காங்., வேட்பாளர் பிரபு 2, 54,501 ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
வாஜ்பாய் பிரசாரம் செய்யாதது பாதிப்பை ஏற்படுத்தியது: ராஜ்நாத்சிங் | மே 16,2009,15:05 IST |
|
|
| புதுடில்லி லோக்சபா தேர்தலில் வாஜ்பாய் பிரசாரம் செய்யாதது, பா.ஜ.,வுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டது என்று பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். |
|
| |
நாகப்பட்டினம்(தனி) தி.மு.க., வேட்பாளர் ஏ.கே.எஸ்., விஜயன் வெற்றி | மே 16,2009,15:03 IST |
|
|
| நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் 47962 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் . விஜயன் மொத்தம் 3,69,915 ஓட்டு பெற்றுள்ளார் . |
|
| |
நீலகிரி(தனி) தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா வெற்றி | மே 16,2009,15:00 IST |
|
|
| நீலகிரி: நீலகிரி(தனி) லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் ராசா 86000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் . |
|
| |
திருச்சியில் அ.தி.மு.க., குமார் வெற்றி | மே 16,2009,14:53 IST |
|
|
| திருச்சி: திருச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க., வேட்பாளர் குமார் 2900 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். |
|
| |
கள்ளக்குறிச்சியில் தி.மு.க., வேட்பாளர் ஆதி சங்கர் வெற்றி | மே 16,2009,14:52 IST |
|
|
| கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆதி சங்கர் 290385 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பா.ம.க., தன்ராஜ் 208138 ஓட்டுகள் பெற்றார். |
|
| |
காஞ்சிபுரத்தில் காங்., வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி | மே 16,2009,14:46 IST |
|
|
| காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 3,103 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள ஓட்டுகள் 3,30,237 ஆகும். அ.தி.மு.க., வேட்பாளர் ராமகிருஷ்ணன் 3,17,134 ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
தூத்துக்குடியில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை வெற்றி | மே 16,2009,14:40 IST |
|
|
| தூத்துக்குடி: தூத்துக்கடி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை 76,649 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஜெயதுரை 3,11,017 ஓட்டுகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் சிந்தியா பாண்டியன் 2,34,368ஓட்டுகள் பெற்றுள்ளார். |
|
| |
விருதுநகர் தொகுதியில் காங்., வேட்பாளர் மாணிக்தாக்கூர் வெற்றி | மே 16,2009,14:30 IST |
|
|
| விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாக்கூர் 16 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 3,06,187 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ம.தி.மு.க., வேட்பாளர் வைகோ 291089 ஓட்டுகள் பெற்றுள்ளார். கார்த்திக் 17,236 ஓட்டுகள் பெற்றுள்ளார். தே.மு.தி.க., வேட்பாளர் பாண்டியராஜன் 1,25,229 ஓட்டுகள் பெற்றுள்ளார். மாணிக்க தாக்கூருக்கு ஆயிரம் தபால் ஓட்டுகளும் வைகோவுக்கு 344 தபால் ஓட்டுகளும் கிடைத்தன. |
|
| |
ஏழை மக்களுக்காக பாடுபடுவேன் : அழகிரி | மே 16,2009,14:28 IST |
|
|
| மதுரை : ஏழை மக்களுக்காக பாடுபடுவேன் என மதுரை லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க வேட்பாளர் அழகிரி கூறியுள்ளார். வெற்றிக்கு பின் பேட்டியளித்த அவர் சென்னையை போல பல வளர்ச்சி திட்டங்களை மதுரைக்கு கொண்டு வருவேன், ஏழை மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் எனவும், மதுரையில் ஓட்டு சதவீதம் குறைந்ததற்கு தேர்தல் கமிஷனின் கெடுபிடியே காரணம் எனவும் கூறினார். மேலும் தனக்கு அமைச்சர் பதவி தருவது குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என கூறினார் |
|
| |
கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். அழகிரி வெற்றி | மே 16,2009,14:19 IST |
|
|
| கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் அழகிரி 313736 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத் 296418 ஓட்டுகள் பெற்றார். 23,318 ஓட்டுகள் வித்தியாசத்தில் கே.எஸ். அழகிரி வெற்றி பெற்றுள்ளார். |
|
| |
மதுரையில் தி.மு.க., வேட்பாளர் அழகிரி வெற்றி | மே 16,2009,14:12 IST |
|
|
| மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அழகிரி 1,40,985 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மதுரை லோக்சபா தொகுதியில் மொத்தம் பதிவான ஓட்டுகள் 7,90,679 . அழகிரி பெற்ற ஓட்டுகள் 4, 31,295. மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் மோகன் 2,90,310 ஓட்டுகள் பெற்றுள்ளார். தே.மு.தி.க., வேட்பாளர் கவியரசு 54,419 ஓட்டுகளை பெற்றுள்ளார். |
|
| |
புதுச்சேரியில் நாராயணசாமி வெற்றி | மே 16,2009,13:45 IST |
|
|
| புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 85 ஆயிரத்து 612 ஓட்டு வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளார். | |