சனி, 16 மே, 2009

தேர்தல் முடிவுகள்

Tamilnadu Results
Symbol Party
Name
No.of Seats Leading No of Seats won
DMK + Alliance 22 5
ADMK+Alliance 10 3
DMDK 0 0
BJP+Alliance 0 0
Others 0 0
Total 32 8
All India Parties
Symbol Party
Name
No.of Seats Leading No of Seats won
Congress + Alliance 229 25
BJP + Alliance 141 21
Third Front 77 7
Forth Front 29 0
Others 12 2
Total 488 55

அரக்கோணம் தொகுதியில் தி.மு.க., முன்னிலை
மே 16,2009,14:58 IST



அரக்கோணம்: அரக்கோணம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 17 வது சுற்று முடிவில் 4,05,473 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ம.க., வேட்பாளர் வேலு 2,99,556 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


மயிலாடுதுறையில் அ. தி.மு.க., வெற்றி
மே 16,2009,14:55 IST



மயிலாடுதுறை: மயிலாடுதுறை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ. தி.மு.க., வேட்பாளர் ஓ.எஸ். மணியன் 3,64,089 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


சிவகங்கையில் மறு ஓட்டு எண்ணிக்கை செய்ய முடிவு
மே 16,2009,14:55 IST



சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் மறு ஓட்டு எண்ணிக்கை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


திருவண்ணாமலையில் தி.மு.க., முன்னிலை
மே 16,2009,14:53 IST



திருவண்ணாமலை: திருவண்ணாமலை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் வேணுகோபால் 274301 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ம.க., வேட்பாளர் நஞ்சே கவுடு 182335 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


திருச்சியில் அ.தி.மு.க., குமார் வெற்றி
மே 16,2009,14:53 IST



திருச்சி: திருச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க., வேட்பாளர் குமார் 2900 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


கள்ளக்குறிச்சியில் தி.மு.க., வேட்பாளர் ஆதி சங்கர் வெற்றி
மே 16,2009,14:52 IST



கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க வேட்பாளர் ஆதி சங்கர் 290385 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பா.ம.க., தன்ராஜ் 208138 ஓட்டுகள் பெற்றார்.


விழுப்புரத்தில் அ.தி.மு.க., முன்னிலை
மே 16,2009,14:49 IST



விழுப்பும்: விழுப்புரம் தொகுதி‌யில் அ.தி.மு.க., வேட்பாளர் ஆனந்தன் 297405 ஓட்டுகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் சாமிதுரை 291929 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


திருவள்ளூரில் அ.தி.மு.க., வேட்பாளர் வேணுகோபால் வெற்றி
மே 16,2009,14:47 IST



திருவள்ளூர்: திருவள்ளூரில் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க., வேட்பாளர் வேணுகோபால் 31670 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


காஞ்சிபுரத்தில் காங்., வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி
மே 16,2009,14:46 IST



காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஸ்வநாதன் 3,103 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள ஓட்டுகள் 3,30,237 ஆகும். அ.தி.மு.க., வேட்பாளர் ராமகிருஷ்ணன் 3,17,134 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


நீலகிரி(தனி) தி.மு.க., வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை
மே 16,2009,14:44 IST



நீலகிரி: நீலகிரி(தனி) லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் ராசா 17வது சுற்று முடிவில் 85000 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார் .


ஈரோட்டில் ம.தி.மு.க., வேட்பாளர் கணேச மூர்த்தி வெற்றி
மே 16,2009,14:43 IST



ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் 18வது சுற்றில் ம.தி.மு.க., வேட்பாளர் கணேச மூர்த்தி 2,79,399 ஓட்டுகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.


தூத்துக்குடியில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை வெற்றி
மே 16,2009,14:40 IST



தூத்துக்குடி: தூத்துக்கடி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை 76,649 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஜெயதுரை 3,11,017 ஓட்டுகள் பெற்றுள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் சிந்தியா பாண்டியன் 2,34,368ஓட்டுகள் பெற்றுள்ளார்.


காங்கிரஸ் அணி 53 இடங்களில் வெற்றி; பா.ஜ., அணி- 32; 3வது அணி- 11
மே 16,2009,14:40 IST



புதுடில்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக துவங்கி உள்ளன. பகல் 2 மணி நிலவரப்படி காங்கிரஸ் அணி 53 தொகுதிகளிலும் பா.ஜ. அணி 32 தொகுதிகளிலும் 3வது அணி 11 தொகுதிகளிலும் மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. பா.ஜ., சார்பில் சுஷ்மா சுவராஜ் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் மதுரையில் அழகிரி, கள்ளக்குறிச்சியில் ஆதி சங்கர், திண்டுக்கல்லில் சித்தன், புதுச்சேரியில் நாராணசாமி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். விருதுநகரில் ‌வைகோ, தூத்துக்குடியில் சிந்தியா பாண்டியன் தோல்வி


ஆரணியில் காங்., முன்னிலை
மே 16,2009,14:39 IST



ஆரணி: ஆரணியில் காங்., வேட்பாளர் எம். கிருஷ்ணசாமி 326113 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்ரமணியன் 235089 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


விருதுநகர் தொகுதியில் காங்., வேட்பாளர் மாணிக்தாக்கூர் வெற்றி
மே 16,2009,14:30 IST



விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாக்கூர் 16 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 3,06,187 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். ம.தி.மு.க., வேட்பாளர் வைகோ 291089 ஓட்டுகள் பெற்றுள்ளார். கார்த்திக் 17,236 ஓட்டுகள் பெற்றுள்ளார். தே.மு.தி.க., வேட்பாளர் பாண்டியராஜன் 1,25,229 ஓட்டுகள் பெற்றுள்ளார். மாணிக்க தாக்கூருக்கு ஆயிரம் தபால்‌ ஓட்டுகளும் வைகோவுக்கு 344 தபால் ஓட்டுகளும் கிடைத்தன.


தர்மபுரியில் தி.மு.க., முன்னிலை
மே 16,2009,14:28 IST



தர்மபுரி: தர்மபுரி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் தாமரைசெல்வன் 2,34,010 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார் பா.ம.க, வேட்பாளர் செந்தில் 1,45,557 ஓட்டுகள் கிடைத்துள்ளன.


ஏழை மக்களுக்காக பாடுபடுவேன் : அழகிரி
மே 16,2009,14:28 IST



மதுரை : ஏழை மக்களுக்காக பாடுபடுவேன் என மதுரை லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க வேட்பாளர் அழகிரி கூறியுள்ளார். வெற்றிக்கு பின் பேட்டியளித்த அவர் சென்னையை போல பல வளர்ச்சி திட்டங்களை மதுரைக்கு கொண்டு வருவேன், ஏழை மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் எனவும், மதுரையில் ஓட்டு சதவீதம் குறைந்ததற்கு தேர்தல் கமிஷனின் கெடுபிடியே காரணம் எனவும் கூறினார். மேலும் தனக்கு அமைச்சர் பதவி தருவது குறித்து கட்சி மேலிடம் முடிவு எடுக்கும் என கூறினார்


ராமநாதபுரத்தில் தி.மு.க., வேட்பாளர் ரித்தீஷ் முன்னிலை
மே 16,2009,14:26 IST



ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் ரித்தீஷ் 291802 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அ.தி.மு.க.,வுக்கு 217507 ஓட்டுகள் கிடைத்துள்ளது.


கிருஷ்ணகிரியில் தி.மு.க., வேட்பாளர் ஈ.ஜி. சுகவனம் முன்னிலை
மே 16,2009,14:23 IST



கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் 9வது சுற்று முடிவில் தி.மு.க., வேட்பாளர் ஈ.ஜி. சுகவனம் 22540 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் 14875 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


திருப்பூரில் அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி வெற்றி
மே 16,2009,14:22 IST



திருப்பூர்: திருப்பூர் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் சிவசாமி 85966 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


பெரம்பலூரில் தி.மு.க., முன்னிலை
மே 16,2009,14:21 IST



பெரம்பலூர்: பெரம்பலூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் நெப்போலியன் 7வது சுற்றில் 60558 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அ.தி.மு.க., வேட்பாளர் பாலசுப்பிரமணியம் 143092 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


கடலூரில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ். அழகிரி வெற்றி
மே 16,2009,14:19 IST



கடலூர்: கடலூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் அழகிரி 313736 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத் 296418 ஓட்டுகள் பெற்றார். 23,318 ஓட்டுகள் வித்தியாசத்தில் கே.எஸ். அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.


கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னிலை
மே 16,2009,14:13 IST



கோவை: கோவை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் 14 வது சுற்று முடிவில் மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் பி.ஆர் . நடராஜன் 2,90,498 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். காங்., வேட்பாளர் பிரபு 1,88,439 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


மதுரையில் தி.மு.க., வேட்பாளர் அழகிரி வெற்றி
மே 16,2009,14:12 IST



மதுரை: மதுரை லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் அழகிரி 1,40,985 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மதுரை லோக்சபா தொகுதியில் மொத்தம் பதிவான ஓட்டுகள் 7,90,679 . அழகிரி பெற்ற ஓட்டுகள் 4, 31,295. மார்க்சிஸ்ட் கம்யூ., வேட்பாளர் மோகன் 2,90,310 ஓட்டுகள் பெற்றுள்ளார். தே.மு.தி.க., வேட்பாளர் கவியரசு 54,419 ஓட்டுகளை பெற்றுள்ளார்.


சிதம்பரத்தில் திருமாவளவன் முன்னிலை
மே 16,2009,14:10 IST



சிதம்பரம்: சிதம்பரம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளர் திருமாவளவன் 357148 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா.ம.க., வேட்பாளர் இ. பொன்னுசாமி 272364 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


பொள்ளாச்சியில் அ.தி.மு.க., முன்னிலை
மே 16,2009,14:07 IST



பொள்ளாச்சி: பொள்ளாச்சி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க, வேட்பாளர் சுகுமார் 220049 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.


வேலூரில் தி.மு.க., முன்னிலை
மே 16,2009,13:59 IST



வேலூர்: வேலூரில் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் 18 வது சுற்று முடிவில் தி.மு.க., வேட்பாளர் 359333 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார் . அ.தி.மு.க., வேட்பாளர் வாசு 252374 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


மத்திய சென்னையில் தயாநிதி முன்னிலை
மே 16,2009,13:57 IST



மத்திய சென்னை: மத்திய சென்னை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் தயாநிதி 12வது சுற்றில் 246762 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க., வேட்பாளர் முகமது அலி ஜின்னா 212659 ஓட்டுகள் பெற்றுள்ளார். தபால் ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., 67 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளது.


நாகப்பட்டினம்(தனி) தி.மு.க., முன்னிலை
மே 16,2009,13:51 IST



நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் 47 ஆயிரத்து 962 ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.


சேலத்தில் அ.தி.மு.க., முன்னிலை
மே 16,2009,13:51 IST



சேலம்: சேலம் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க., வேட்பாளர் செம்மலை 35 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


தென்சென்னையில் அ.தி.மு.க., முன்னிலை
மே 16,2009,13:47 IST



தென்சென்னை: தென்சென்னை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் 7வது சுற்று முடிவில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜேந்திரன் 1,11,556 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தி.மு.க., வேட்பாளர் 98955 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


புதுச்சேரியில் நாராயணசாமி வெற்றி
மே 16,2009,13:45 IST



புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 85 ஆயிரத்து 612 ஓட்டு வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


தஞ்சாவூரில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் வெற்றி
மே 16,2009,13:44 IST



தஞ்சாவூர்: தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 100500 ஓட‌்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


திருநெல்வேலியில் காங்கிரஸ் முன்னிலை
மே 16,2009,13:42 IST



திருநெல்வேலி: திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் 14வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்பு 18 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில உள்ளார்.


கன்னியாகுமரியில் தி.மு.க., வேட்பாளர் முனனிலை
மே 16,2009,13:42 IST



கன்னியாகுமரி: கன்னியாகுமரி லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் ஹெலன் டேவிட்சன் முதல் சுற்று முடிவில் 20000 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


திண்டுக்கலில் காங்.,‌ வேட்பாளர் சித்தன் வெற்றி
மே 16,2009,13:38 IST



திண்டுக்கல்: திண்டுக்கல் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தன் 54,347 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.


தேனியில் காங்., முன்னிலை
மே 16,2009,13:32 IST



தேனி: தேனி லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் ஆருண் ரஷித் 5ஆயிரத்து 600 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்‌.


தென்காசியில் இ.கம்யூ., முன்னிலை
மே 16,2009,13:21 IST







ஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க., முன்னிலை
மே 16,2009,13:00 IST



ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு 15 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.


நாமக்கலில் தி.மு.க., முன்னிலை
மே 16,2009,11:49 IST



நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் காந்தி செல்வன் 5ம் சுற்று முடிவில் 35896 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.


ராம்விலாஸ் பஸ்வான் பின்னடைவு
மே 16,2009,11:48 IST



ஹாஜிபூர்: ஹாஜிபூர் தொகுதியில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பின்னடைவு பெற்றுள்ளார்.


கரூர் அ.தி.மு.க., முன்னிலை
மே 16,2009,11:42 IST



கரூர்: கரூர் லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை 37073 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.


வடசென்னையில் தி.மு.க., வேட்பாளர் இளங்கோவன் முன்னிலை
மே 16,2009,11:37 IST



வடசென்னை: வடசென்னை லோக்சபா தொகுதி ஓட்டு எண்ணிக்கையில் தி.மு.க., வேட்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் 3ம் சுற்று முடிவில் 54637 ஓட்டுகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். இ.கம்யூ., வேட்பாளர் தா.பாண்டியன் 46203 ஓட்டுகள் பெற்றுள்ளார்.


ஆந்திராவில் தொங்கு சட்டசபை
மே 16,2009,11:04 IST



ஐதராபாத்: ஆந்திர சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உள்ளது. மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் காங்கிரஸ் அணி 130 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் அணி 121 தொகுதிகளிலும் நடிகர் சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் 20 தொகுதிகளிலு் முன்னிலையில் உள்ளன


ஒரிசாவில் பிஜு ஜனதா தளம் முன்னிலை
மே 16,2009,11:03 IST



கட்டாக்: ஒரிசாவில் தற்போதைய ஆளும் கட்சியான பிஜு ஜனதா தளம் முன்னிலையில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக