தமிழகத்தில் போட்டியிடும் 378 பேர்களில் 33 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. தமிழகத்தில் இன்றைய தேர்தலில் 378 பேர் களத்தில் உள்ளனர். இதில் எல்லா கட்சிகளின் சார்பிலும் குற்றவழக்குகள் உள்ளவர்கள் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதில் வேலூர் தொகுதியில்தான் அ.தி.மு.க.,வேட்பாளர் வாசு, சுயேட்சை வேட்பாளர்கள் 4 பேர் என அதிகபட்சமாக 5 பேர் மீது குற்றவழக்குகள் உள்ளன. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.,.ரித்தீஷ், அ.தி.மு.க.,சத்தியமூர்த்தி, ம.ம.க., சலிமுல்லாகான் ஆகிய மூன்று பேர்கள் மீதும் வழக்குகள் உள்ளன. திருவண்ணாமலை தொகுதியின் பா.ம.க.,வேட்பாளர் காடுவெட்டி குரு மீது அதிகபட்சமாக 11 வழக்குகள் உள்ளன. குற்ற பின்னணி உடைய நெல்லை அண்ணாமலை, மயிலாடுதுறை மணியன், சேலம் செம்மலை, கரூர் தம்பிதுரை என அ.தி.மு.க., 6 பேர்களை களத்தில் நிறுத்தி கட்சி ரீதியாக முதலிடத்தில் உள்ளது. தே.மு.தி.க.,சார்பில் அரக்கோணம் சங்கர், வடசென்னை யுவராஜ், காஞ்சிபுரம் தமிழ்வேந்தன், நாகை முத்துகுமார், விழுப்புரம் கணபதி என 5 பேரும், தி.மு.க.,சார்பில் கள்ளக்குறிச்சி ஆதிசங்கர், நாமக்கல் காந்திசெல்வின் உட்பட 3 பேரும், பா.ம.க.,வில் ஏ.கே.,மூர்த்தி, காடுவெட்டிகுரு, ம.ம.க.,வில் சலிமுல்லாகான், ஜவஹிருல்லா, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் சார்பில் தலா 2 பேரும் போட்டியிடுகின்றனர். பெண் வேட்பாளர்களில் திருச்சி காங்.,சாருபாலா தொண்டைமான் மீதும் வழக்கு உள்ளது. பொதுநல வழக்குகள் தொடரும் டிராபிக் ராமசாமி தென்சென்னையில் போட்டியிடுகிறார். இவர் மீதும் ஒரு வழக்கு உள்ளது. விருதுநகரில் போட்டியிடும் வைகோ மீது 3 வழக்குகள் உள்ளன.
Spring Offensive: உக்ரேன் இரசியாவை விரட்டுமா?
1 ஆண்டு முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக